இன்று 2021 - 22ம் ஆண்டிற்காக தமிழக இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்த நிலையில், ஏழை எளிய மக்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பினை அறிவித்துள்ளார் தமிழகத்தின் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.

அதில் எல்ஐசி மற்றும் யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தினை துவங்கியுள்ளது. இதற்காக செலவினை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் படி தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பத்தின் தலைவர் விபத்தில் மரணமடைந்தால், அவரது குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், இதே நிரந்தரமாக ஊனமடைந்தால் 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த புதிய திட்டத்தினால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
இது தவிர அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை 4 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள ஒரு திட்டம் தான்.


Click it and Unblock the Notifications