15-வது சட்ட பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியன்று நிறையவடைய இருப்பதையடுத்து, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்க செய்து வருகிறார்.
இது அவர் தாக்கல் செய்யும் 11 வது பட்ஜெட் ஆகும்.
மத்திய மாநில அரசுகள் மின்சார வாகனங்களை ஊக்குவித்து வரும் நிலையில், பட்ஜெட்டில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
மின்சார பேருந்துகள்
குறிப்பாக 2000 மின்சார பேருந்துகள் உள்பட, 12,000 பேருந்துகள் புதியதாக கொள்முதல் செய்யப்படும் என்று, தனது பட்ஜெட் அறிவிப்பில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஒ.பன்னீர்செல்வமும் கூறியுள்ளார். இதற்காக பட்ஜெட்டில் 1580 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
கோவையில் மெட்ரோ ரயில்
அதுமட்டும் அல்லாது கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 6,683 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயத்தூறுக்கு அறிவித்திருப்பது நல்ல விஷயம் தான்.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
இந்த திட்டங்கள் மேற்கொண்டு தமிழத்தின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தாலும், பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பே, எரிபொருட்கள் மீதான வரியினை குறைக்க வேண்டும் என்பது தான். ஆக இது நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
முக்கிய எதிர்பார்ப்பு
எப்படி இருப்பினும் தமிழக அரசின் கடன் சுமையானது 5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், இந்த திட்டங்களை எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்ப்போமே. எப்படி இருந்தாலும் தமிழக்கத்தில் மீண்டும் ஒரு மெட்ரோ நகரத்தில் மெட்ரோ ரயில் என்பது மிக வரவேற்க தக்க விஷயம் தானே.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications