தமிழக அரசு தனது இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைச் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது. இந்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைச் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்படும் காரணத்தால் மக்களுக்கும் சாதகமான அறிவிப்புகள் அதிகளவில் இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக விவசாயிகளுக்குச் சாதகமான அறிவிப்புகளும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கும் வகையில் வரிக் குறைப்புகள் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் 11வது முறையாக இன்று இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் கடன் அளவு கடந்த 5 நிதியாண்டுகளில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இதன் மூலம் 2021-22 நிதியாண்டில் இதன் அளவு 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும் நிலை உருவாகியுள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் வெறும் 2,52,431 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் அளவு, 2018ஆம் நிதியாண்டில் 3.14 லட்சம் கோடி ரூபாய், 2019ஆம் நிதியாண்டில் 3.55 லட்சம் கோடி ரூபாய், 2020ஆம் நிதியாண்டில் 3.97 லட்சம் கோடி ரூபாய், 2021ஆம் நிதியாண்டில் 4.56 லட்சம் கோடி ரூபாய் என ஒவ்வொரு நிதியாண்டிலும் கடன் அளவு அதிகரித்து உள்ளது.
கடந்த 5 நிதியாண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் அளவு கிட்டதட்ட 90 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் 2021-22 நிதியாண்டில் இதன் அளவீடு 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த கணிப்புகளையும் இன்றைய இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications