சென்னை: தமிழ் நாட்டு பட்ஜெட்டில் இன்று முக்கிய அறிவிப்பாக எதிர்பார்க்கப்பட்ட, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம் பற்றிய அறிவிப்பு என்பது வெளியாகியுள்ளது.
இந்த திட்டம் அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பெண்கள் மத்தியில் மிக வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
திமுக அரசின் முக்கிய வாக்குறுதி
திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று,. திமுக அரசின் வாக்குறுதிகளே என்றே கூறலாம். திமுக அரசு பதவியேற்ற பிறகு படிப்படியாக ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம் என்பது இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்ற சர்ச்சை இருந்து வந்தது.
முக்கிய திட்டம்
இதுகுறித்து எதிர்கட்சிகளும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இது தொடர்பான அறிவிப்பு என்பது வெளியாகியுள்ளது. இது மிக மிக நல்ல வரவேற்பினை பெற்றுள்ள திட்டங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் இதில் கவனிக்க பட வேண்டிய விஷயங்களில் ஒன்று நிதி பற்றாக்குறை.
நிதிப் பற்றாக்குறை இருக்கு
ஏற்கனவே போதிய நிதி என்பது இல்லாத நிலையில் தான் இந்த திட்டமானது கிடப்பில் போடப்பட்டது. ஆனால் தற்போது நிதி நிலை சரியாகி விட்டதா? என்றால் அது பெரும் கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய பட்ஜெட் அறிக்கையில் மொத்த வரவு செலவு குறித்தான மதிப்பீட்டில், மொத்த வரவினங்கள் என்பது 2,73,246 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் மொத்த செலவினம் என்பது 3,65,321 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆக இதனை பார்த்தாலே, 92,075 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை என்பது உள்ளது.
கடன் வாங்க வேண்டியிருக்கும்?
இப்படி ஏற்கனவே நிதி பற்றாக்குறை இருக்கும் ஒரு சூழலில் அரசு இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். இதற்காக இன்றைய பட்ஜெட்டில் 7,000 கோடி ரூபாயினையும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆக தமிழக அரசு கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம்.
அரசுக்கு சிக்கல் தான்
இன்றைய பல்வேறு முக்கிய அவசியமான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அவற்றை நிறைவேற்றவே அரசுக்கு போதிய நிதி என்பது இல்லாத சூழலே இருந்து வருகின்றது. ஆக தமிழக அரசுக்கு இது மேற்கொண்டு சிக்கலையே ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications