தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு.. கல்விக்கு முக்கியத்துவம்!

சென்னை: தமிழ்க சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்துள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

திமுக அரசு 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியினை பிடித்த நிலையில், தற்போது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும்.

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் என்பது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த காலை உணவு திட்டமானது 500 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி துறைக்கு?

உயர்கல்வி துறைக்கு?

இதே பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பு அறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே உயர்கல்வித்துறைக்கு 6,967 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதே சூளகிரியில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையம் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்லூரிகள்

புதிய கல்லூரிகள்

200 கோடி ரூபாயில் 26 பாலிடெக்னிக் கல்லூரிகள், 56 கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள் என பலவும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயனுள்ள ஒன்றாக அமையலாம்.

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

110 கோடி ரூபாயில் 4 - 5ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இதுபோன்ற அறிவிப்புகளுக்கு மத்தியில் மாணவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறைக்கு எவ்வளவு?

பள்ளிக் கல்வித்துறைக்கு எவ்வளவு?

ஆக மொத்தம் பள்ளிக் கல்வித்துறைக்கு 40,299 கோடி ரூபாய் தொகையானது ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள்.

இளைஞர்களின் திறனை அதிகரிக்க அவர்களுக்கு இன்டர்ஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+