சென்னை: சர்வதேச அளவில் ஐடி துறைக்கான தேவை என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஐடி துறையின் வளர்ச்சி விகிதம் என்பது கணிசமாக உயர்ந்து வருகின்றது. தமிழ் நாட்டிலும் வளர்ச்சி விகிதம் என்பது இருந்து வந்தாலும், சென்னை, கோயம்புத்தூரில் மட்டுமே சற்றே பெரியளவிலான ஐடி பூங்காக்கள் இருந்து வருகின்றன. மற்ற நகரங்களில் இருந்தாலும், அது பெரியளவில் இல்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் அதனை ஊக்குவிக்கும் விதமாக தகவல் தொழில் நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் பகுதிகளில் TNTECH CITY அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக் சிட்டி
அக இது மேற்கொண்டு தமிழ் நாட்டில் ஐடி துறையினை ஊக்குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கோவையில் மட்டும் அல்லாது, உற்பத்தி நகரமாக திகழும் ஓசூரிலும் டெக் சிட்டி என்பது இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது தமிழ் நாட்டு ஐடி ஊழியர்களுக்கும், ஐடி துறை சார்ந்த மாணவர்கள், ஐடி துறையினருக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அதிகரிக்கலாம்
குறிப்பாக ஐடி துறையில் இது வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வழிவகுக்கலாம். இது தமிழகத்தில் மேற்கோண்டு, ஐடி துறையினரின் முதலீட்டினை ஊக்குவிக்கலாம். இது தமிழ் நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக மாற வழிவகுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கலாம்.
சேவைத் துறை
இந்தியாவினை பொறுத்தவரையில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெரியளவில் வழங்கி வரும் துறைகளில் சேவைத் துறையும் ஒன்று. ஐடி-யின் தேவை என்பது ஒவ்வொரு துறையிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இதன் வளர்ச்சி என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கலாம். ஆக பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பானது தமிழக ஐடி துறையினருக்கு ஒரு சூப்பரான அறிவிப்பாகவே பார்க்கப்படுகின்றது.
பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம்
இன்னும் சொல்லப்போனால் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆக இது தமிழக ஐடி துறையினருக்கு ஒரு சூப்பரான ஜாக்பாட் அறிவிப்பு என்றே கூறலாம். இது மேற்கூறியவாறு வேலை வாய்ப்பினை மட்டும் அல்லாது, தமிழகத்தின் ஜிடிபியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக எதிர்காலத்தில் மாறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications