சென்னை: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ் நாடு பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலில் வழக்கம்போல பெண்களுக்கான சில சிறப்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக மகளிரின் வாழ்வாதாரம், பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது சுய மகளிர் உதவிக் குழுக்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பெண்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக இருக்கலாம்.
வளர்ச்சிக்கு பயன்
கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் பலனளிக்கும் விதமாக, பேருந்துகளில் இலவச பயணம், உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு 1000 உதவித் தொகை என பல சூப்பரான திட்டங்களை அறிவித்தது. இதுபோன்ற திட்டங்கள் என்பது இல்லாவிட்டாலும், மகளிர் குழுக்களுக்கான உதவி என்பதே, மகளிரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.
வேலை வாய்ப்பு
இன்றும் தமிழ் நாட்டில் ஏராளமான மகளிர் குழுக்கள் பல்வேறு தொழில்களை செய்து வருவதை பார்க்க முடிகின்றது. இது அவர்களை மட்டும் அல்ல, அவர்களை சார்ந்தவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருந்து வருகின்றது. இன்றும் பல மகளிர் குழுக்கள் மிகப்பெரிய அளவில் சிறு தொழில்களில் ஈடுபட்டும் வருகின்றன. இது அவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பினையும் அளிக்கிறது.
மகளிருக்கு ஆயிரம்
குடும்ப தலைவிகளுக்கு அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சூப்பரான அறிவிப்பு
ஏற்கனவே உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டமும், பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணமும் உள்ள நிலையில், இந்த அறிவிப்பானது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஒரு திட்டமாகவும் உள்ளது. ஆக மொத்தத்தில் இது பெண்களுக்கு இந்த பட்ஜெட் சூப்பரானதொரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications