தமிழ்நாடு அரசு 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகச் சட்டசபையில் இன்று காலை 10 மணிக்குப் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து சுமார் 33 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மூலம் புதிய இலக்குடன், புதிய திட்டங்கள் உடன் தமிழ்நாடு அரசும், மக்களும் பயணிக்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் வேளையில் அரசு புதிய தொழிற்பூங்கா, புதிய ஐடி பார்க் ஆகிய திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக மதுரைக்கு முக்கியமான வளர்ச்சி திட்டங்கள் வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி பெரமலூரில் இருக்கும் இறையூர் சிப்காட், ராணிபேட்டையில் இருக்கும் பனப்பாக்கம் சிப்காட், ஓசூரில் உள்ள சூளகிரி ஆகிய பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிப்காட் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளைச் செய்யச் டென்டரை சமீபத்தில் விடப்பட்டது முக்கியமான விஷயம்.
இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் தாலுக்காவில் வரப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு புதிய சிப்காட் பகுதியை உருவாக்க உள்ளது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்காவாகும்.
வரப்பட்டி கிராமத்தில் சுமார் 373 ஏக்கரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த டிபென்ஸ் காரிடார் அமைய உள்ளது. மேலும் இந்தச் சிப்காட் பகுதியைத் தமிழ்நாடு அரசின் சிப்காட் மற்றும் TIDCO இணைந்து சுமார் 293 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டமைக்க உள்ளது. சிப்காட் அமைப்பு 373 ஏக்கர் Varapatti Defence Industrial Park திட்டத்தைச் சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக விண்ணப்பத்தையும், திட்ட அறிக்கையும் சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் விதமாகத் தனித்தனி டைடல் பார்க், சிப்காட் அமைக்கப்படும் என இலக்கை தமிழ்நாடு அரசு ஏற்கனவே உருவாக்கிய நிலையில்...
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் அறிக்கையில் புதிய சிப்காட், எல்காட், டைடல் பார்க், நியோ டைடல் பார்க் ஆகியவை அமைப்பது குறித்த அறிவிப்புகள் கட்டாயம் வெளியாகும்.


Click it and Unblock the Notifications