தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.27,168 கோடியும், போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.9,787 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரூ.3,177 கோடி உயர்த்தி ரூ.12,964 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ரூ.70 கோடியில், டீசலில் இயங்கும் 700 பேருந்துகளை இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றப்படும்,சென்னையில் 950, மதுரையில் 100, கோவையில் 75 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுதவிர, சென்னை கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை விரிவாக்கம் செய்ய ரூ.8,779 கோடி, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை விரிவாக்கம் செய்ய ரூ.9,335 கோடி கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை விரிவாக்கம் செய்ய ரூ,9,744 கோடி, டிசம்பர் மாதத்தில் போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை பூந்தமல்லி முதல் கொங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டு மத்திய அரசிற்கு விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை - திண்டிவனம் - விழுப்புரம், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக, சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 2100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். தமிழ் நிலப்பரப்பைச் சார்ந்த வேம்பு, புங்கை", "நாவல், புளியமரம் போன்ற இனவகைகளில் 10 இலட்சம் மரங்கள் நடப்பட்டு, புவிசார் குறியிடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில், டெல்லி-மீரட் இடையேயான மண்டல வேகப் போக்குவரத்து அமைப்பைப் போன்ற ஒரு போக்குவரத்து அமைப்பை நிறுவ திட்டம் உள்ளது. இது டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களை இணைக்கும் வகையில் RRTS அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவுகிறது. மேலும், இது சுற்றுப்புற நகரங்களின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி, விரிவான நகரமயமாக்கலை கருத்தில் கொண்டு, தலைநகர் புது டெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு ஒன்றினை தமிழ்நாட்டில் ஏற்படுவதற்காக சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளது.
ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே அமைப்பினை, மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் விரிவான சாத்தியக்கூறிகள் ஆய்வு செய்யப்படும் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை - திண்டிவனத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 167 கிலோமீட்டர் தூரத்திற்கும், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில், 140 கிலோ மீட்டர் தூரத்திற்கும் கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் ஈரோடு சேலம் வழியாக சேலத்திற்கு, 185 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த போக்குவரத்து அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications