2025 முதல் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காலை 9:30 மணியிலிருந்து தமிழக மக்களுக்கு தேவைப்படும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
"தாயுமானவர் திட்டம்" என்பது தமிழக அரசின் ஒரு முக்கியமான சமூக நலத்திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை கண்டறிந்து.. அவர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்குவதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். தனது உரையின் போது தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான மட்சுவோ பாஷோவின் அழகான கவிதை வரியோடு ஒப்பிட்டு பேசியிருந்தார்.

பூவிதழ் எங்கும் பனித்துளிகள்
காற்றசைவில் வீழ்ந்திடாமல்.
மெல்ல அசைந்தாடும் மணப்புல் மலர்கள்
--மட்சுவோ பாஷோ
இந்தக் கவிதை இயற்கையின் படைப்புகளுக்கு இடையே உள்ள ஆழமான பிணைப்பை மனிதர்களுக்கு எடுத்துச் சொல்கிறது. ஏனெனில் பூக்களின் இதழ்களில் பனித்துளிகள் இருக்கும். என்னதான் காற்று வீசினாலும் இந்த பனித்துளிகள் பூக்களில் இருந்து விழாமல் இருக்கும். அதே போல தான் மனிதர்களும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருக்கின்றனர். எனவே இயற்கையை உள்ளடக்கிய உலக உடன்பிறப்பு நேயத்தை உள்வாங்கி கொண்டுவரப்பட்டது தான் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்று கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் தங்களுடைய இரு பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் தங்கள் கல்வியை நிதி இல்லாமல் இடைநிறுத்தாமல் இருக்க மாதம் 2000 உதவி தொகை வழங்கப்படும். இது அவர்கள் 18 வயதை அடையும் வரை வழங்கப்படும்.
ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர்கள், ஒற்றைப் பெற்றோரை கொண்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் என சமூகத்தில் வறிய நிலையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக தற்போது 50,000 குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தங்கள் இரு பெற்றோர்களையும் இழந்து தவிப்பது தெரியவந்துள்ளது. 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இரண்டுமே முக்கியம். சிறுவயதில் தங்களை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் போகும் சூழலில் எத்தனையோ குழந்தைகள் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். இதனால் அவர்களுடைய கல்வி தடைபட்டு போகிறது. இது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க இந்தத் திட்டம் கண்டிப்பாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications