பட்ஜெட் ரெடி.. நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு பயிற்சி.. எதற்காக?

தமிழ்நாட்டு மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட் அறிக்கையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2026-27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த நிலையில், மே 10ஆம் தேதி பெறுபேற்ற தவெக அரசு சுமார் 87 நாட்களுக்கு பின்பு முழு நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்வதற்காக 10 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது.

பட்ஜெட் ரெடி.. நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு பயிற்சி.. எதற்காக?

வழக்கம் போல் இன்று பொது பட்ஜெட் அறிக்கையும், நாளை விவசாய துறைக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தவெக அரசின் முதல் முறையாக பட்ஜெட் மட்டுமல்ல, நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் விவசாய துறை அமைச்சருமான வினோத் ஆகியோரின் முதல் பட்ஜெட்டும் கூட, இருவரும் பட்ஜெட் அறிக்கையை தயார் செய்து ரெடியாக இருந்தாலும்..

முதல் முறை தாக்கல் செய்யப்படுவதால் எப்படி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இரு அமைச்சர்களுக்கும் பியற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துறை செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் வாயிலாக மரிய வில்சன் மற்றும் வினோத் ஆகியோருக்கும் எப்படி பட்ஜெட் அறிக்கையை எவ்வாறு படிக்க வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் என்பது குறித்து பல விஷயங்களில் பயிர்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

Also Read

இதேவேளையில் உதயநிதி கைது தொடர்பாகவும், காவிரி நீர் தொடர்பாகவும் இன்று சட்டசபையில் சலசலப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு மத்தியில் மக்கள் விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயங்களின் லிஸ்ட் இதுதான்.

1. தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெண்களுக்கான உரிமை தொகை மாதம் 2500 ரூபாய் அளிப்பதாக அறிவித்திருந்தது. இதை இன்றைய பட்ஜெட் அறிக்கையில் நடைமுறைப்படுத்துமா?

Recommended For You

2. ஏற்கனவே பெண்களுக்கான சிறப்பு கடன் திட்டம் குறித்த தகவல் வெளியாகியிருக்கும் வேளையில் சிங்கப்பெண் தொழில்முனைவோர் கடன் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து யாருக்கு எவ்வளவு கடன் வழங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாக உள்ளது.

3. பெண்களுக்கு அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்பதை தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது இதை நடைமுறைப்படுத்தப்படுமா? இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து விஜய் ஜூலை 16ஆம் தேதி போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியது கவனிக்கக்கூடியதாக உள்ளது.

4. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசு பள்ளியில் படித்து மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் சேரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+