தமிழ்நாட்டின் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை முதலமமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் மரிய வில்சன் நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வாசித்தார்.
முதலில் பள்ளிக்கல்விதுறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். இதன்படி 10,000 அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். இந்த திட்டத்திற்காக 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். எனவே அரசு பள்ளிகளின் தூய்மைக்கு முதலில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள் அமைக்க 125 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்ற அறிவித்தார். இங்கே 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடைகள், தங்குமிடம், புத்தகங்கள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் என்று கூறினார். பள்ளி நிறைவு திட்டம் என்ற பெயரில் 3,734 அரசு பள்ளிகள் 2,132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டில் இந்த திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறியுள்ளார்.
பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு கற்றலில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும் என்றும் இதற்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் கூறினார். பள்ளிகளில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்கப்படும் என்றும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் போதை பொருள் குறித்த தகவல் தெரிவிக்க போதையில்லா தமிழ்நாடு சென்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்து பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார்.
உயர்கல்வி துறையில் கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார். எனவே கல்லூரி மாணவர்கலுக்கு இலவச லேப்டாப் கிடைக்க போகிறது. முந்தைய திமுக ஆட்சியிலேயே இது அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்வதாக அறிவித்துள்ளது விஜய் அரசு.
அதே வேளையில் மதுரையில் சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்ட கல்வி வழங்க 300 மாணவர்களின் சேர்க்கையுடன் தொடங்கப்படும் என்றும் கூறினார். உயர்க்லவி துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். வேலைவாய்ப்புக்கு தயாராகும் வகையில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications

