தமிழ்நாடு பெண்களின் திருமணத்திற்கு உதவியாக 8 கிராம் தங்க காசு மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்தை (அண்ணன் சீர் திட்டம்) செயல்படுத்த ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு தாய்மாமன் சீர் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக 560 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்ட கையோடும், அண்ணனின் சீர் திட்டத்தையும் செயல்படுத்துவதாக அறிவித்தார் மரிய வில்சன்.

அண்ணன் சீர் திட்டத்தின் யாரெல்லாம் பலன் அடைவார்கள்..?
தவெக அரசு இத்திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட போது, இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் 1 கிராம் தங்கம் தரும் தாய்மாமன் சீர் திட்டத்திற்கு 560 கோடியும், 1 பவுன் தங்கம் அளிக்கும் அண்ணனின் சீர் திட்டத்திற்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பலன் அடைவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.
இன்று தங்கம் விலை 1,06,880 ரூபாயாக இருக்கும் வேளையில், ரூ.812 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலம் அதிகப்படியாக 81000 பேர் பலன் அடையலாம். இதனுடன் பட்டுப்புடவையும் அளிக்கப்படும் காரணத்தால்..
ஒரு பவுன் தங்கம் டென்டர் வாயிலாக குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய்க்கு அரசு பெறும் பட்சத்தில், 10,000 ரூபாய் செலவில் பட்டுப்புடவை என கணக்கிட்டால் ஒரு பெண்ணுக்கான மொத்த செலவு 1.10 லட்சம் ரூபாய். இதில் 10 சதவீத தொகை கூடவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது.
இதன் மூலம் அதிகப்படியாக 73000- 75000 பேர் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலம் பலன் அடைவார்கள் என கணக்கிடப்பட்டுகிறது. இந்த 75000 பேரை தேர்வு செய்ய கட்டாயம் தவெக அரசு தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதனால் தமிழ்நாட்டில் திருமணமாகும் அனைத்து பெண்களுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது உறுதி.
ஏற்கனேவ இத்திட்டம் குறித்து வெளியான கணிப்புகளில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கு குறைவாக இருக்கும் வீட்டின் பெண்களுக்கு அண்ணனின் சீர் திட்டத்தின் பலன் பெறுவார்கள் என கூறப்பட்டது.
ஆனால் பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு தவெக அரசு அதிகாரப்பூர்வமாக இத்திட்டத்தில் பலன் பெறுவதற்கான தகுதிகள்?, மக்கள் இத்திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்? போன்ற விபரங்களை விரிவாக வழங்கும் போது தான் தெரியும்.
முதல் பட்ஜெட் தாக்கல் செய்த மரிய வில்சன் கடந்த 5 வருடத்தில் மாநிலத்தின் கடன் அளவு 2 மடங்கு அதிகரித்துள்ளதாக, மாநிலத்தின் சொந்த வரி வருமானத்தில் பெரும் பகுதி வட்டி செலுத்துவதற்காவே செல்கிறது என தெரிவித்தார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அடுத்தடுத்து நில திட்டங்களை பட்ஜெட் அறிவிப்பாக வெளியாகி வருகிறது. ஏற்கனவே நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிடும் போது தமிழ்நாடு அரசின் கடன் அளவு 13 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருக்கும் காரணத்தால் நலதிட்டங்களை செயல்படுத்துவதில் நெகருக்கடி உருவாகியதாக அறிவித்தார்.


Click it and Unblock the Notifications