தமிழ்நாடு அரசு இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தாக்கல் செய்கிறார்.
மக்கள் மத்தியில் இன்று வெளியாக உள்ள பட்ஜெட் அறிவிப்பில் வாட் வரி குறைப்பு, சென்னை அல்லாத பிற முக்கிய மாநிலத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள், பெண்களுக்கான 1000 ரூபாய் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஆனால் உண்மையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடும் அறிவிப்பு எப்படியிருக்கும்..? இந்த முறை கொஞ்சம் ஸ்பெஷல் தான்..
தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு அரசின் வருவாய் அதிகரிப்பதில் சிறப்பான பணிகளைச் செய்தது மட்டும் அல்லாமல் நிதி நிர்வாகத்திலும், செயல்திறன் கண்காணிப்பிலும் பல மாற்றங்களை அடித்தளத்தில் கொண்டு வந்தது மூலம் துறை வாரியாகச் செயல்திறனைக் கண்டறிந்து தேவையான பிரிவுகளுக்கு மேம்பட்ட முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான நிர்வாகம்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டின் நிதிநிலை மேம்பட்டதில் முக்கியப் பங்கு வகித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு டிசம்பர் மாதம் கூடுதலான பொறுப்புகளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2 முக்கிய துறைகள்
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதற்கு முன்பு நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் துறைகள் மட்டுமே இருந்த நிலையில் டிசம்பர் மாதம் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலன், புள்ளியியல் துறைகளும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடைய தாக்கம் கட்டாயம் இன்று பட்ஜெட் அறிக்கையில் எதிரொலிக்கும்.
3வது பட்ஜெட்
மு க ஸ்டாலின் தலைமையிவான திமுக 2021ல் ஆட்சியைப் பிடித்ததையடுத்து 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தனது முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இதன் பின்னர் 2022-ம் ஆண்டு 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தற்போது திமுக அரசும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது.
விவேகமான நிதி நிர்வாகம்
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரவு அடிப்படையிலான நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் புள்ளியியல் துறை இவரின் கட்டுப்பாட்டில் வந்துள்ள காரணத்தால் இன்று தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட், சிறப்பான நிதி நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அறிவிப்புகளும், திட்டங்களும் கட்டாயம் வெளியாகும்.
முதல் படி
சனிக்கிழமையன்று புதிய கொள்கை முன்முயற்சிகளை வெளியிட்டதன் மூலம், பழனிவேல் தியாகராஜன் தனது கனவு திட்டமாண டேட்டா அடிப்படையிலான நிர்வாகத்திற்கு முதல் படியை இந்த பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் எதிரொலிக்கும். கடந்த பட்ஜெட் அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் அறிவித்த முக்கிய இலக்குகள் என்ன..?
தமிழ்நாட்டின் GSDP
2021-22 நிதியாண்டில் தமிழ்நாட்டின் GSDP 21,79,655 கோடி ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 14 சதவீதம் உயர்ந்து 24,84,807 கோடி ரூபாயாக இருக்கும் என அறிவித்தார். இந்த இலக்கை அடையுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
மொத்த செலவினம்
இதேபோல் தமிழ்நாடு அரசு தனது மொத்த செலவினத்தை 3 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11 சதவீதம் அதிகரித்து நடப்பு நிதியாண்டின் மார்ச் மாத முடிவில் 3.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications