ஒரு டன் கரும்பு ரூ.4,440?. விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு?. நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்!.

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட்டை நாளை காலை தாக்கல் செய்யவுள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போதைய திமுக ஆட்சியின் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஐந்தாவது பட்ஜெட்டை இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளார். மே 2023 இல் அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு இது அவரது இரண்டாவது பட்ஜெட் ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2026 இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அமைச்சரின் பட்ஜெட் உரையில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதேபோல், எதிர்க்கட்சிகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் 'பெருகிவரும் கடன்கள்' குறித்த பிரச்சினைகளை எழுப்ப வாய்ப்புள்ளது.

ஒரு டன் கரும்பு ரூ.4,440?. விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு? நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்!.

இதேபோல், மார்ச் 15 ஆம் தேதி நாளை, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது எல்இடி திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17 ஆம் தேதி சட்டமன்றத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருப்பதால், சட்டசபை கூட்டம் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் வரவு எவ்வளவு வரும், எவ்வளவு செலவு செய்யப்படும், எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும், எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும், கடன்கள் நிலைகுறித்தும் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகும்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக திமுக அரசு கூறி வருகிறது. மீதம் உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்பு நாளைய வேளாண் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் வேளாண் நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் [email protected] என்ற இமெயிலுக்கு அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் கும்பகோணத்தில் கடந்த 15ம் தேதி நடைபெற்றது.

அப்போது, சத்தீஸ்கர் மாநிலத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,440 வழங்கப்படுகிறது. தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் நெல், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள் உற்பத்திக்கு இடுபொருள் உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வேளாண் பணியின்போது விவசாயிகள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றுத்திறனாளியானால் ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கும் வகையில் முதல்வரின் உழவர்கள் உயிர் காப்பீடு திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக விவசாயிகளிடமிருந்து ரூ.50 பிரீமியமாக வசூலித்துக் கொள்ளலாம். 58 வயது நிறைவடைந்த ஆண், பெண் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் காவிரி, கொள்ளிடம் பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவித்து நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டும். ஆறுகளில் மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது, கடைமடை வரை தண்ணீர் செல்வதை கண்காணிக்க கரைக் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: கடந்த 4 ஆண்டுகளில் இந்தக் கூட்டத்துடன் 24 கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 1,860 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களிடமிருந்து 1,267 கோரிக்கைகள் வரப்பெற்றன. இதில், 719 கோரிக்கைகள் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார். மேலும், 4 ஆண்டுகளில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,242 கோடி, வறட்சி நிவாரணமாக 14 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.126 கோடி, குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.275 கோடி என 56 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,643 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். விவசாயிகள் கூறிய கருத்துகளை தமிழக முதல்வரிடம் கூறி நிதிக்கேற்ப ஒவ்வொரு திட்டமாக அமல்படுத்துவோம் என்று கூறியிருந்தார். அந்தவகையில் நாளை தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+