சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.44,125 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13, 2024) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதலீட்டின் மூலம் 24,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் 15 நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேட்டரி உற்பத்தி உள்ளிட்ட துறைகள் இடம்பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் செம்கார்ப் நிறுவனம் ரூ.21,340 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 1,100-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனம் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.1,777 கோடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோஹும் நிறுவனம் ரூ.1,597 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று மூன்று புதிய ஆற்றல் துறை கொள்கைகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இதில்
பம்புடு ஸ்டோரேஜ் திட்ட கொள்கை,
சிறிய நீர் மின் திட்டங்கள் கொள்கை,
காற்றாலை மறுசீரமைப்பு கொள்கை ஆகியவை அடங்கும்
இந்த முதலீடுகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலையை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை அடைய மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், புதிய முதலீடுகள் தமிழ்நாட்டில் குவிந்து வருகிறது.
தமிழ்நாட்டின் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட், ஈரோடு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ரூ.1777 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்ய, இந்த வருடத்தின் துவக்கத்தில் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்தது.
நொய்டா-வை சேர்ந்த LOHUM என்ற நிறுவனம் கிருஷ்ணகிரியில் ரூ.1,597 கோடி முதலீட்டில் பேட்டரி மறுசுழற்சி , மறு பயன்பாடு குறைந்த கார்பன் வெளியீடு என்ற நோக்கத்தில் பேட்டரி மூலப் பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications