முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு கலைஞர் மகளிர் உதவித் தொகை முதல் அரசு ஊழியர்கள் வரை புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய பட்ஜெட் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாத சம்பளதாரர்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 12 லட்ச ரூபாய் வரை உயர்த்தப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு மாநில அரசு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்தநிலையில், தமிழகத்தில் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மார்ச் மாதம் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சட்டசபையை கூட்டி காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட்டை தாக்கல் செய்வுள்ளார். மறுநாளே அதாவது மார்ச் 15-ந்தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகளும், தீவிரமாகி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளநிலையில், தமிழக பட்ஜெட்டில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுவாகும்.

இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள், மாணவ, மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில், விவாதிக்கப்படலாம் . தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது, அரசு ஊழியர்கள் பிரச்சினை போன்றவை குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்தும், மும்மொழிக் கொள்கை பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது குறித்தும் இன்றைய தினம் ஆலோசிக்கப்படலாம்.
திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மகளிர் தொடர்பான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் இன்று விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விண்ணப்பித்துள்ள சில முக்கிய நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதற்கான ஒப்புதலும் இந்த கூட்டத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தொடரில் 110 விதியின் கீழும் பல்வேறு அறிவிப்புகள் முதலமைச்சரால் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தமிழக முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கூடியது. ஆனால், சட்டசபையில் தேசியகீதத்தை முதலில் பாடவில்லை என குற்றச்சாட்டு கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். அவர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் திரும்பி சென்றார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. 11 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன்பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இப்போதுவரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications