தமிழ்நாடு: 5 மாதத்தில் 7 லட்சம் கோடி முதலீடு.. பொறாமைப்படும் குஜராத், கர்நாடகா, உத்தரப் பிரதேசம்..!!

சென்னை: எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் தமிழ்நாடு மிகவும் முக்கியமான சந்தையாக இருப்பது மட்டும் அல்லாமல் சீனாவுக்கு இணையான உற்பத்தி கட்டமைப்பும், உற்பத்தி பலமும் கொண்டு உள்ளது. இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழ்நாடு கிங்மேக்கராக இருக்கும் வேளையில், இதற்கு புதிய மகுடமாகக் கூகுள் அறிவிப்பு வெளியானது.

கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ட்ரோன்களை உற்பத்தி செய்வதற்காகக் கடந்த வாரம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. இது, தமிழ்நாடு தொழில் துறையில் நடந்த மிக முக்கியமான திட்டமாகும், தென்மாவட்டங்கள் அனைத்தும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கியிருக்கும் வேளையில் தமிழ்நாடு கில்லி போல் அமர்க்களம் செய்து வருகிறது.

தமிழ்நாடு: 5 மாதத்தில் 7 லட்சம் கோடி முதலீடு.. பொறாமைப்படும் குஜராத், கர்நாடகா, உத்தரப் பிரதேசம்..!!

2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், தமிழ்நாடு சுமார் ரூ.7 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகளை ஈர்த்து, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

முதலீட்டாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறிய தமிழ்நாடு: டெஸ்லா நிறுவனத்தைப் போலவே EV துறையில் கலக்கி வகும் வியட்நாம்-ன் வின்ஃபாஸ்ட், டாடா பவர், மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிப்பாகங்களை வழங்கும் பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், மற்றும் பெகாட்ரன் போன்ற முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன.

இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2.97 லட்சம் கோடி முதலீட்டையும், 4 லட்சத்து 15,282 புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ள தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்துள்ளது.

குஜராத் மாநிலம் இந்த ஆண்டு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.26.33 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு விருப்ப திட்டங்களை பெற்றது. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் பெரும்பாலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன நிறுவனங்களின் முதலீடுகள் என்பதால் இதில் வெற்றி வாய்ப்பு அதிகம்.

கடந்த 3 வருடத்தில் சென்னை, ஓசூர், கோவை ஆகியவை முதலீட்டாளர்களின் மிகவும் விரும்பத்தக்க முதலீட்டு இடங்களாக உருவாகியுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை வேலைவாய்ப்பு அதிகம் தேவைப்படும் மின்னணுத் துறையில் உள்ளன. தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா கூறுகையில், தொழில் நிறுவுவதற்கும் தேவையான அனுமதிகளைப் பெறுவதற்குமான நடைமுறைகளைத் திறம்பட எளிமையாக்கியுள்ளதோடு, இதை வேகமாக பெறும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் எளிதாகத் தொழில் தொடங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், குறிப்பாக பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் திறமையான தொழில் வல்லுநர்கள் அதிகம் உள்ளனர். இவர்களைப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இதேபோல் 170 அனுமதிகளை சுமார் 25 துறைகளிடம் இருந்து ஒற்றைச் சாளரம் முறையில் வழங்கப்படுவது தொழில்துறை நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான விஷயங்களாகும்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது, 2024ஆம் நிதியாண்டில் மட்டும் மாநிலத்தின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 9.56 பில்லியன் டாலரைத் தொட்டது. இது 2023 ஆம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராக இருந்து நிலையில் சுமார் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.

சென்னை, ஓசூர், கோவை ஆகியவற்றைத் தாண்டி தற்போது தூத்துக்குடி-யும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக மாறியுள்ளது. இதேபோல் திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலும் முதலீடுகள் குவியத் துவங்கியுள்ளது. இவை அனைத்தும் மாநிலத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கீட்டை வகிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+