தமிழ்நாடு அரசே நேரடியாக முதலீடு.. ஸ்பெஷலான 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..!

தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.6.5 கோடி முதலீட்டை எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு, அக்ரி-டெக், ஹெல்த்கேர், உணவுத் துறைகளில் இந்த ஸ்டார்ட்அப் செயல்படுகின்றன. இவற்றை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

 தமிழ்நாடு அரசே நேரடியாக முதலீடு.. ஸ்பெஷலான 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..!

இதுவரை 26 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.34.6 கோடியை அளித்துள்ளது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் அண்டு இன்னோவேஷன் மிஷன் (StartupTN) இந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளையும், முதலீட்டுக்குப் பிந்தைய ஆதரவையும் அளிக்கும். இதன் மூலம் அவர்கள் தங்களது தொழிலிலை வெற்றிகரமாகச் செய்யமுடியும்.

அரசு முதலீடுகள் இந்த நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதால் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கும் இதுவரை நுழையாத சந்தைகளிலும் விற்பனையை செய்யலாம். அப்படி தமிழ்நாட்டின் அரசின் கவனத்தை ஈர்த்த 5 முத்தான நிறுவனங்கள் எவை.

Ecopmin Technologies Pvt Ltd என்ற நிறுவனம் எலக்ட்ரானிக் மேனுபேக்சரிங் சர்வீஸஸ் துறைக்குத் தேவையான பொருட்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Adhiban Farms என்ற மற்றொரு நிறுவனத்துக்கு ரூ.2.2 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பயோடெக்னாலஜி சார்ந்த தீவனங்களைத் தயாரிக்கிறது. ஒமேகா-3 அமிலக் கொழுப்பு நிறைந்த முட்டைகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிதியுதவியின் மூலம் ஃப்ரீ ரேஞ்சு எனப்படும் நிலங்களில் சுதந்திரமாகத் திரிந்து உணவு உட்கொள்ளும் கால்நடைகளை உற்பத்தி செய்யமுடியும். கூண்டு இல்லாத பண்ணைகள் மற்றும் பயிற்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த Nanjil Nadu Kani Tribal Women Creations நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினப் பெண்களால் நடத்தப்படும் இந்த நிறுவனம் காடு சேர்ந்த விளைப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிதியுதவி மூலம் அவர்கள் தங்களது வியாபாரத்தைப் பெருக்க முடியும்.

COEO Wellness (வளர் லைப்) என்ற நிறுவனத்துக்கு ரூ.60 லட்சமும் மண்வாசனை டிரெடிஷனல் புட் நிறுவனத்துக்கு ரூ.45 லட்சமும் தரப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+