மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம்.. 15 நாள் என்னவெல்லாம் நடக்கபோகுது தெரியுமா..?

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 முதல் பதினைந்து நாட்கள் அமெரிக்கா செல்ல உள்ளார். அதிகப்படியான எதிர்பார்ப்பு நிறைந்த முதல்வரின் இந்த பயணம் பல முக்கிய நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரக்கூடிய பயணமாக இருக்கும். தமிழகத்திற்கு பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் தீவிர முயற்சி மேற்கொள்ள உள்ளார். இதற்காக 30 முக்கிய கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் கே.ரேவந்த் ரெட்டி, அம்மாநில ஐடி துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு,மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் ஆகஸ்ட் 3 முதல் 11 வரை அமெரிக்காவுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், இப்பயணத்தில் சுமார் 30000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு விருப்பத்தை பெற்றார். இதை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் அமெரிக்க செல்ல உள்ளார்.

மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம்.. 15 நாள் என்னவெல்லாம் நடக்கபோகுது தெரியுமா..?

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27 அன்று சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு அடுத்த நாள் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்குவார். இதை தொடர்ந்து செப்டம்பர் 11 அன்று சிக்காகோவிலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 12 அன்று சென்னை வந்து சேர உள்ளார்.

"அமெரிக்கா பயணத்தின் முழு கவனமும் தமிழகத்தில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உயர் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதாக இருக்கும். முதல்வரின் முழு பயணம் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் கூட்டங்களின் மையக்கருத்தாக இது இருக்கும்" என்று ஒரு தகவல் தெரிவித்தது.

துபாய், ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட முந்தைய பயணங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா பயணத்தின் போது சுமார் முதலீட்டாளர்களுடனான 30 முக்கிய கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

"இந்த கூட்டங்களில் சில பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளுடனும் நடைபெறும். அமெரிக்காவிலிருந்து சில பெரிய முதலீட்டு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அரசு வட்டாரங்கள் கறுகிறது.

சான் பிரான்சிஸ்கோவில் வந்திறங்கிய பின்னர், ஆகஸ்ட் 29 அன்று ஒரு முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 அன்று அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளியினருடன் கூட்டம் நடைபெறும். செப்டம்பர் 2 அன்று சிக்காகோவுக்கு புறப்பட்டு செப்டம்பர் 7 அன்று அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களுடன் கூட்டம் நடத்த உள்ளார்.

முதல்வர் முக.ஸ்டாலின் பயணத்திர்காக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB.ராஜா ஏற்கனவே அமெரிக்கா சென்று முதல்வரின் வருகைக்கான முதற்கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டார். தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் (GUIDANCE TN) தொழில்துறையினர், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனானகூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது.

முதல்வருக்கு தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் மாநில தொழில் துறை அதிகாரிகள், GUIDANCE TN அதிகாரிகள் உடன் செல்கின்றனர். கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் மெட்டா (பேஸ்புக்), ஆரக்கிள், இன்டெல், அடோப் போன்ற தமிழ்நாட்டில் இல்லாத முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டில் GCC அமைக்கவும், முதலீடு செய்யவும், இந்தியாவிலேயே திறன்மிக்க தமிழ்நாட்டு ஊழியர்களை படையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அழைப்பு விட்டுக்க இந்த பயணம் அமையும்.

ஆனால் அமெரிக்காவில் இந்த பெரிய டெக் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பல முக்கிய தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி நிறுவனங்களும் உள்ளது, இதேபோல் பாதுகாப்புத் துறை, ஸ்டார்ட்அப் என பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+