தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் எட்ட வேண்டும் என்ற இலக்குடன் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல தரப்பட்ட முயற்சிகளைச் செய்து வரும் வேளையில், இந்த வளர்ச்சி பாதையில் டாடா குழுமத்தின் முதலீடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ல், ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ், திருநெல்வேலியில் டாடா சோலார் என அடுத்தடுத்து முதலீடுகளை செய்துள்ளது டாடா குழுமம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் முதலீடுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் நேரில் சந்தித்துப் பேசினார். நேற்று ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ்-ன் 9000 கோடி முதலீட்டில் உருவாகும் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாகவும், மாநிலத்திற்கு வளர்ச்சியை உறுதி செய்வதாகவும் இருந்தது. நான், அவரை தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் டாடா குழுமம் விரைவாக விரிவாக்கம் செய்துள்ளதையும், திராவிட மாடல் அரசின் மீதான அவரது நம்பிக்கைக்கும் சந்திரசேகரனை நான் பாராட்டினேன் என தெரிவித்தார்.
மாநிலத்தின் இளைஞர்களையும் பெண்களையும் தொழிற்துறைக்கு ஏற்ற வகையில் மெருகேற்றி, டாடா குழும நிறுவனங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஊழியர்களைப் பட்டாளத்தை உருவாக்கும் என்று அவருக்கு உறுதியளித்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் டிவிட்டர் பதிவு வாயிலாகத் தெரிவித்தார்.
நேற்று ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து நடந்த காரணத்தால் ஒரு யூனிட் அதிகளவில் பாதிக்கப்பட்டது, இதனால் இத்தொழிற்சாலையில் ஐபோன் உற்பத்தி நடைபெற்றுள்ளது. இந்த தீவிபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்பது முக்கியமான விஷயம். இந்த தீ விபத்து மொத்த ஓசூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த தீவிபத்து ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் இருக்கும் கெமிக்கல் குடோனில் காலை 6 மணிக்கு ஏற்பட்டு உள்ளது. தீயை அணைக்க 7க்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் வந்துள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் விபத்து எப்படி ஏற்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கையை மிகவும் கண்டிப்பான முறையில் எடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications