சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலருக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், மாநிலத்தின் வேகமாக வளர்ச்சிக்கு உற்பத்தித் துறையை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 தொழில்துறை பூங்கா அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ல் இந்த வருடத்தின் துவக்கத்தில் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் உறுதிமொழி அளிக்கப்பட்ட ரூ.51,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், ரூ.17,616 கோடி மதிப்பிலான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 6 தொழில்துறை பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. இந்த 6 தொழில்துறை பூங்கா திட்டத்தின் விவரம்:
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ல் இந்த திட்டங்களுக்காக சீப்ரோஸ், அசென்டாஸ், ஈஎஸ்ஆர், மேபிள் டிரீ, பிரகதி வேர்ஹவுசிங் மற்றும் கிரீன்பேஸ் ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன. இந்த திட்டங்களின் மொத்த முதலீடு ரூ.4,900 கோடி ஆகும். இதன் மூலம் 21,300 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சீப்ரோஸ், ஒரகடம்: முதலமைச்சர் ஸ்டாலின் சீப்ரோஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கும் தொழில்துறை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் ரூ.600 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
அசென்டாஸ், திருவள்ளூர்: அசென்டாஸ் ஃபர்ஸ்ட்ஸ்பேஸ் (கேபிடலண்ட்) நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கும் தொழில்துறை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் . இந்த திட்டம் ரூ.1,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
ஈஎஸ்ஆர், ஒரகடம்: ஈஎஸ்ஆர் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கும் மூன்றாம் கட்ட தொழில்துறை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் ரூ.800 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
மேபிள் டிரீ, திருவள்ளூர்: மேபிள் டிரீ நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கும் தொழில்துறை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் . இந்த திட்டம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.
பிரகதி வேர்ஹவுசிங், திருவள்ளூர்: இதைத் தொடர்ந்து பிரகதி வேர்ஹவுசிங் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கும் தொழில்துறை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின். இந்த திட்டம் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 2500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
கிரீன்பேஸ் (ஹிரானந்தனி), ஒரகடம்: கிரீன்பேஸ் இந்தஸ்ட்ரியல் & லாகிஸ்டிக்ஸ் பார்க் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கும் தொழில்துறை பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின். இந்த திட்டம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications