இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க மிக முக்கியமான காரணம் ஃபாக்ஸ்கான். இந்த நிலையில் பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்யவும், இந்தியாவின் உற்பத்தி தளமாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதாக தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள விடுதியைத் திறந்து வைக்க ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு சனிக்கிழமை தமிழகத்திற்கு வருகிறார். இந்த திறப்பு விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது.
ஐபோன் விற்பனை செய்யும் ஆப்பிளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கானில் பணிபுரியும் 18,720 பெண்களுக்கான வீட்டு வசதியை தமிழக அரசு நாளை திறந்து வைக்க உள்ளது. சென்னை அருகே உள்ள வல்லம் வடகலில் அமைந்துள்ள இந்த திட்டம், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனத்திற்காக ஒரு மாநில அரசு இத்தகைய விடுதி வசதியை கட்டமைத்துள்ளது இதுதான் முதல் முறையாகும்.

இத்தகைய மாடல் சீனா மற்றும் வியட்நாம் வாட்டில் மாபெரும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை முன்மாதிரியாக கொண்டு தான் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆனால் அதுமட்டும் அல்லாமல் தமிழக அரசே இந்த 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வளாகத்தை இயக்கி, பராமரிக்க உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். தைவான் நாட்டில் இருந்து இந்தியா வந்த லியு புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிறுவனத்தின் இந்திய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
2020 ஆம் ஆண்டு, தமிழக அரசு ரூ.706.5 கோடி செலவில் இந்த தொழிலாளர் குடியிருப்பு வசதியை அமைக்க அனுமதி அளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 20 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் 3,120 வீடுகளைக் கொண்ட இந்த திட்டத்தில் சுமார் 18,720 தொழிலாளர்கள் தங்க வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பல தொழிலாளர் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இது பல்வேறு கட்டங்களில் இருப்பதாக உள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூர் திட்டம் தான் மிகப்பெரியது, ஆனால் சிறிய திட்டங்களும் உள்ளன. உதாரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஒரு தொழிலாளர் குடியிருப்பு திட்டம் உள்ளது. இது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் லியுவின் இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார். பாக்ஸ்கான் இந்தியாவில் ஐபேட் உற்பத்தியைத் தொடங்குவது மட்டுமல்லாமல், AI சர்வர்கள் போன்ற புதிய தயாரிப்பு பிரிவுகளையும் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதை தொடந்து தமிழ்நாட்டில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளும் துவங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications