தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென நீண்ட நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பில் பல்வேறு முக்கியமான அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன. தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டங்களின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சாதகமாக பல விஷயங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக ஓய்வூதிய தொகை தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய மாற்றம் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மாநில அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் ஓய்வு பெறும் போது, அவர்கள் அந்த பதவிக்காக பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையாக கிடைக்கும்.
உதாரணமாக 50,000 ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தால் 25,000 ரூபாய் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையாக கிடைக்கும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்குவதற்கு பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு , ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 50 சதவீதம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
ஒருவேளை ஓய்வூதியம் பெறும் நபர் இறந்துவிட்டால் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போதும் அல்லது பணி காலத்தில் இறக்க நேரிடும் போதும் அவர் அவரின் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணி காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவார்கள். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13,000 கோடி அளிக்க வேண்டும் இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ,000 கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்த பங்களிப்பு தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும் என முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications