PM விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம்! மினிஸ்டருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரான ஜிதன் ராம் மாஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தற்போது வழங்கப்படும் "பிரதான் மந்திரி விஸ்வகர்ம கர்மா யோஜனா" (PM விஸ்வகர்ம யோஜனா) திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். கைவினை கலைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டாலும், அனைத்து சமூகத்தினரையும் ஆதரிக்கும் வகையில் இந்தத் திட்டம் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கருதுவதாக முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் முன்னேற்றம், தொழில் முனைவோர்களுக்கான உதவி என நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் எண்ணற்ற சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அப்படி அரசால் வழங்கப்படும் ஒரு திட்டம்தான் "பிரதான் மந்திரி விஸ்வகர்ம கர்மா யோஜனா". இந்தத் திட்டத்தின் மூலம் எந்த வித பிணையமும் இல்லாமல் மத்திய அரசின் மூலம் கடன் பெறலாம். இதை விட சிறப்பம்சம் என்னவென்றால் கடனுக்கான வட்டி வெறும் 5 சதவீதம் மட்டுமே. இந்த பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான கடனை பெற்றுக் கொள்ளலாம்.

 PM விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம்! மினிஸ்டருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

முதலில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும். இதை 18 மாதங்களுக்குள் சரிவர திருப்பி செலுத்தி விட்டால் விண்ணப்பதாரர் மீண்டும் விண்ணப்பித்து ரூ.2 லட்சம் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற வரம்பு உள்ளது. அதாவது துடைப்பம் செய்பவர், கொல்லர்கள், கூடை பின்னுபவர், தச்சர்கள், பாய் செய்பவர்கள், காலனி செய்பவர்கள், படகு செய்பவர்கள், பொம்மை செய்பவர்கள் போன்ற கைவினை கலைஞர்கள் மட்டும்தான் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் தற்போதைய அமைப்பு ஜாதியின் அடிப்படையில் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் தேவையான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு தனது சொந்த திட்டத்தை உருவாக்கும் என்றும், இது மாநிலம் முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதான் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம் குறித்து மாநிலத்தில் உள்ள நியமிக்கப்பட்ட குழுவின் விரிவான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் முன்மொழியப்பட்ட ஒரு சில முக்கிய மாற்றங்களில் ஒன்று விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான கட்டாய தேவையை நீக்குவதாகும். அதற்கு பதிலாக பட்டியலிடப்பட்ட தொழிலை தொடரும் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

அதோடு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 35 ஆக உயர்த்தவும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது. அதோடு பயனாளிகள் குறித்த சரிபார்ப்பை செய்ய பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக வருவாய்த்துறையைச் சேர்ந்த விஏஓ இது போன்ற விஷயங்களை கையாள வேண்டும் என்று அரசு பரிந்துரைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+