சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கலைஞர் வீட்டு வாரிசான உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு என்ன? அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் என்னென்ன? எத்தனை ஆடம்பர கார்களை வைத்திருக்கிறார் என்ற விவரங்களை பார்க்கலாம்..
46 வயதாக கூடிய உதயநிதி ஸ்டாலின் அரசியலில் நுழைவதற்கு முன்பு முதலில் கால் பதித்த இடம் சினிமாதான். 2008 ஆம் ஆண்டு அவர் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் . ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் முன்னணி பட தயாரிப்பு மற்றும் பட விநியோக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இந்த நிறுவனம் தொடங்கி 16 ஆண்டுகளில் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களை எல்லாம் தயாரித்து விநியோகம் செய்துள்ளது.

இப்படி பட தயாரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பின்னாளில் நடிப்பிலும் கால் பதித்தார். உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை அவர் 29 கோடி மதிப்பிலான சொத்துக்களை கொண்டிருப்பதாக 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த சமயத்தில் தன்னிடம் ரொக்க கையிருப்பு 75,000 ரூபாய் இருப்பதாக தெரிவித்திருந்தார். வங்கிகளில் டெபாசிட்டாக 53.62 லட்சம் ரூபாய் , மியூச்சுவல் ஃபண்டில் 3.60 லட்சம், பங்குச்சந்தையில் 6.34 லட்சம், பட்டியலிடப்படாத நிறுவனங்களில் 17.50 லட்சம், ரெட் ஜெயிண்ட் மூவிஸில் முதலீடாக 7.36 கோடி ரூபாய் ஆகியவை இருப்பதாக உதயநிதி தன்னுடைய வேட்புமனுவில் சுட்டிக்காட்டி இருந்தார். விவசாய நிலம் , வீடு ஆகிய சொத்துகளின் மதிப்பு 6.54 கோடி ரூபாய் ஆகும்.
அவர் தனக்கு சொந்தமாக 1,77,63,736 ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். முன்னதாக இவர் ஹம்மர் கார் வாங்கி சர்ச்சையில் சிக்கினார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மட்டுமில்லாமல் Snow Housing Private Limited மற்றும் Snow Sports Promotion Ltd ஆகிய என்ற பட்டியலிடப்படாத நிறுவனங்களிலும் உதயநிதி ஸ்டாலின் நிர்வாக உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.


Click it and Unblock the Notifications