தமிழ்நாட்டு அரசியல் களம் அடுத்த 2 நாட்களுக்கு பரபரப்பாக இருக்கப்போகிறது, இன்று பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு வெளியிட உள்ளது, நாளை இடைக்கால பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் பொருளாதார ஆய்வறிக்கையின் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி அளவீட்டை ஸ்டாலின் அரசு மக்களுக்கு எளிதாக காட்ட முடியும், இதேபோல் நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மூலம் தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே முதல்வர் முக.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு அடுத்த ஆட்சியில் 2000 ரூபாய் அளிப்பதாக அறிவித்து தேர்தல் பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையும், இடைக்கால பட்ஜெட் அறிக்கையும் வெளியாகிறது.

பொருளாதார ஆய்வறிக்கை
தமிழ்நாடு அரசு இன்று (பிப்ரவரி 16) இரண்டாவது பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட உள்ளது. இது மாநில திட்டக்குழு தயாரித்த ஆவணமாகும். இந்த பொருளாதார ஆய்வறிக்கை ஏன் முக்கியம் என்றால், இந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளும், அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் எப்படியிருக்கும், இதேபோல் ஐடி துறை துவங்கி விவசாயம் வரையில் ஒவ்வொரு துறையிலும் எத்தகைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளது, இத்துறைகள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை காட்டும்.
பட்ஜெட்க்கு முன்பும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும் வெளியிடப்படுவதால் இந்த பொருளாதார ஆய்வறிக்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் நிதித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தரவுகள் இணைக்கப்பட்டு இருக்கும். 2வது ஆய்வறிக்கையில் சிறப்பு இணைப்பாக பெண்களின் பங்கேற்பு குறித்து தனி
பிரிவு இடம்பெற வாய்ப்புள்ளது. இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வருவாய், செலவு போன்றவற்றை விரிவாக ஆராயும் முக்கிய ஆவணமாகும். இது தான் திமுக அரசின் சட்டமன்ற தேர்தலுக்கான டிரம்ப் கார்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பொருளாதாரம்
தமிழ்நாடு பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய சராசரியை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2012-13 முதல் 2023-24 வரை தமிழ்நாட்டின் உண்மை வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.37% ஆக இருந்தது. தேசிய சராசரி வளர்ச்சி அளவு 6.1% தான்.
2024-25-ல் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 11.2% வளர்ச்சி கண்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வறிக்கை தமிழ்நாட்டின் பொருளாதார வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பட்ஜெட்
நாளை (பிப்ரவரி 17, 2026) தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தமிழ்நாடு நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27-க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது கடைசி கூட்டத் தொடராக இருக்கலாம். எனவே இடைக்கால பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு
இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரும்? என பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர். பெண்கள் நலத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பெண்கள் பங்கேற்பு போன்றவை முக்கியமாக இருக்கலாம்.
தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களுக்கு நேரடி பயன் தரும் அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள், சலுகைகள் இருக்கும் எதிர்பார்க்கப்படுகின்றன. தேர்தல் தேதி இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த இரண்டு நாட்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக முக்கியமானவை. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களில் உள்ள மக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் இந்த ஆய்வறிக்கை மற்றும் பட்ஜெட்டை கவனமாக பார்க்கின்றனர்.
பொருளாதார ஆய்வறிக்கை தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தினால், அது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளான வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சாலை, மின்சாரம், குடிநீர், பெண்கள் நலன் போன்றவற்றுக்கு என்ன ஒதுக்கீடு வரும் என்பது முக்கியம்.
தேர்தல் காலத்தில் இந்த அறிவிப்புகள் மக்களின் வாக்கு முடிவை பாதிக்கும். தமிழ்நாட்டு குடும்பங்கள் இப்போது பொருளாதாரம், பட்ஜெட், தேர்தல் ஆகியவற்றை கவனமாக கண்காணிக்கின்றனர். இந்த இரண்டு நாட்களும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications