வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு போகலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!! வாக்காளர்களே இத கவனியுங்க!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கோடிக்கணக்கான வாக்காளர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இளம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளதால் இந்த தேர்தல் பெரிய மாற்றத்தையே கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றியமைக்க கூடிய ஒரு நாளாக மாறப்போகிறது. இத்தகைய சூழலில் வாக்களிக்கு செல்பவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. அதுவும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு நிலவும் முக்கியமான ஒரு சந்தேகம் வாக்களிக்க செல்லும் போது கையில் மொபைல் போனை கொண்டு செல்லலாமா வேண்டாமா என்பதுதான்.

வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு போகலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!! வாக்காளர்களே இத கவனியுங்க!!

தற்போது பலரும் செல்ஃபீ, ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்த சூழலில் தான் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு செல்லும் போது கையில் செல்போன் கொண்டு செல்லலாமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஆனால் செல்போனை வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. தேர்தலில் வாக்களிக்கும் போது பலரும் செல்பி மற்றும் ரிலீஸ் எடுக்க முற்படுவார்கள் இது பல்வேறு பிரச்சனைகளுக்கு வித்திடும் என்பதால் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

வாக்காளர்கள் தங்களுடைய செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. அதாவது நீங்கள் வாக்கு சாவடிக்கு செல்லும்போது முன்கூட்டியே உங்களுடைய செல்போன் வாங்கி பாதுகாப்பாக வைக்கப்படும். நீங்கள் வாக்கு செலுத்திவிட்டு மீண்டும் வந்த பிறகும் உங்களுடைய செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மொபைல் ஃபோன்களை ஒப்படைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு போகலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!! வாக்காளர்களே இத கவனியுங்க!!

வாக்காளர்கள் மொபைல் போன்களை அங்கே ஒப்படைத்து வாக்களித்துவிட்டு பின்னர் திரும்ப வந்து பெற்றுக்கொண்டு செல்லலாம். இதற்காக டோக்கன் போன்ற வசதி முறை கொண்டு வரப்படுகிறதாம். இதனால் நம் போனும் பாதுகாப்பாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த முறை வாக்குப்பதிவு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் புகைப்படமும், பெரிய பெரிய எழுத்துக்களில் அவர்களின் பெயர்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே வாக்காளர்கள் எளிதாக தங்களுடைய வேட்பாளரை அடையாளம் காண முடியும்.

தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவை எட்டி விட வேண்டும் என்பதற்காக பல வசதிகளையும் செய்து வருகிறது. போட்டியும் கடுமையாகி இருப்பதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+