நாடே உற்று நோக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி அதாவது வருகிற வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானவர்கள் இந்த தேர்தலில் களம் காண்கின்றனர்.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஐந்து நாட்களே இருக்கிறது. இந்த சூழலில் தேர்தலில் வாக்களிப்பதற்கு முக்கியமான அடையாள ஆவணமே வாக்காளர் அடையாள அட்டை தான். நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது பூத் சிலிப் மட்டுமில்லாமல் ஒரு புகைப்பட அடையாள் ஆவணத்தையும் கொண்டு செல்ல வேண்டும். அதில் பிரதான அடையாள ஆவணமாக வாக்காளர் அட்டை தான் உள்ளது.

அந்த வகையில் என் கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்பவர்கள் அதனை எளிதாக ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏனெனில் நீங்கள் வாக்களிக்க செல்லும்போது உங்களுக்கான அடையாள ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டையை கையில் கொண்டு செல்கிறீர்கள் அது சேதம் அடைந்திருக்கிறது அதில் உள்ள எபிக் எண்கள் சரியாக தெரியவில்லை எனும் போது வாக்குச்சாவடி அதிகாரிகள் அதனை ஏற்கமாட்டார்கள்.
எனவே உங்களுடைய வாக்காளர் அட்டையை நீங்கள் எளிதாக டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து வாக்களிக்கும் போது அடையாள ஆவணமாக காண்பிக்க முடியும். அது எப்படி என்பதை நாம் விரிவாக தற்போது பார்க்கலாம்.
முதலில் https://voters.eci.gov.in/login என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு தங்கள் VOTER ID எண்ணை (EPIC எண்) உள்ளிட வேண்டும். இது உங்களின் பழைய வாக்காளர் அடையாள அட்டையிலேயே இருக்கும். இதனை உள்ளிட்ட பின்னர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அதில் உங்களுக்கு OTP வரும். அந்த ஓடிபி-ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்தினால், புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டை உடனடியாகக் கிடைக்கும்.
இந்த டிஜிட்டல் அட்டையை மொபைலில் சேமித்து வைத்து டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தலாம் இல்லை என்றால் அச்சடித்து அட்டையாகவும் கையில் வைத்துள்ள கொள்ளலாம். எனவே வாக்காளர் அட்டை இல்லை என்ற கவலை வேண்டாம்.
உங்களிடம் பூத் சிலிப் இருக்கிறது, ஆனால் வாக்காளர் அட்டை கையில் இல்லை என்பவர்கள் வாக்களிக்க செல்லும் போது வேறு சில ஆவணங்களையும் கூட காட்டி வாக்களிக்க முடியும். உங்களின் ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் உரிமம் உள்ளிட்ட 12 வகையான புகைப்படம் கொண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் வாக்குச்சாவடியில் அடையாளச் சரிபார்ப்புக்கு ஏற்றவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications

