தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட வேண்டும் என முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் புதிய முதலீடுகளை ஈர்த்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை படு தீவிரமாக செய்து வருகிறது.
சமீபத்தில் கூட இந்தியாவில் எந்தொரு மாநிலமும் செய்திடாத வகையில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காக கொண்டு விண்வெளி துறையில் புதிய கொள்கையை அறிமுகம் செய்து முதலீட்டை ஈர்க்க உள்ளது தமிழ்நாடு அரசு. இந்த சூழ்நிலையில் தற்போது புதிதாக தமிழ்நாடு FMCG துறையில் தடாலடியாக வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது.

தமிழ்நாடு FMCG மையமாக மாற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான பிரிட்டானியா, கோத்ரெஜ், டாபர், பெப்ஸிகோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்றவை தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்கின்றன. இந்த முதலீடுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளுக்கு பயனளிக்கின்றன.
கோத்ரெஜின் சென்னை ஆலை: கோத்ரெஜ் கன்ஸ்யூமர்ஸ் நிறுவனம் (ஜி.சி.பி.எல்), சென்னையில் ஒரு புதிய உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. இந்த ஆலையில் சிந்தால், குட்நைட், ஏர் மற்றும் கோத்ரெஜ் எக்ஸ்பர்ட் டை உள்ளிட்ட பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் 515 கோடி ரூபாய் முதலீட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒன் ஹப் சென்னை தொழிற்பூங்காவில் இந்த ஆலை அமைந்துள்ளது. இதில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், 50% பெண் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
டாபரின் திண்டிவனம் தொழிற்சாலை: டாபர் இந்தியா, திண்டிவனத்தில் உள்ள சிப்காட் உணவு பூங்காவில் தனது முதல் தென்னிந்திய உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த 400 கோடி ரூபாய் முதலீட்டில், முதல் கட்டமாக 135 கோடி ரூபாய் செலவிடப்படும். இந்த ஆலையில் டூத்பேஸ்ட், தேன், ஓடோனில் மற்றும் ரியல் ஜூஸ் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும். 250 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் ஆயிரக்கணக்கான மறைமுக வேலைகளை உருவாக்கும் இந்த தொழிற்சாலை அருகிலுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு விளைபொருட்களை விற்க புதிய வாய்ப்புகளை வழங்கும்.
பெப்ஸிகோவின் மணப்பாறை தொழிற்சாலை: இந்தியாவின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை சிப்காட் உணவு பூங்காவில் 28 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி ஆலை அமைக்கிறது. 500 கோடி ரூபாய் முதலீட்டில், உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் உற்பத்தி செய்யும் இந்த ஆலை, உள்ளூர் விவசாயிகளுக்கு பயனளிக்கும். இந்த முதலீடு, தமிழ்நாட்டின் உணவு பதப்படுத்தல் துறையை வலுப்படுத்துகிறது.
HUL-இன் புதிய தொழிற்சாலை: ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL), திருச்சி அருகே மணப்பாறையில் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஆலை, பூஸ்ட், ஹார்லிக்ஸ் மற்றும் பிற மால்ட் பானங்களை உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் எஃப்.எம்.சி.ஜி துறையில் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை பலப்படுத்தும்.
இந்த 4 நிறுவனங்களை தொடர்ந்து பிரிட்டானியா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் பகுதியிலும் தொழிற்சாலை வைத்து இயங்கி வருகிறது.
தமிழ்நாடு FMCG துறையில் திடிரென வேகமாக வளர என்ன காரணம்..?: தமிழ்நாட்டின் வலுவான உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள் மற்றும் முற்போக்கான தொழில் கொள்கைகளால் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் வேகமான வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக உள்ளது, இதேபோல் தமிழ்நாடு அரசு தற்போது போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ், கிடங்கு என பல பிரிவுகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதும் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் சிப்காட் தொழிற்பூங்காக்கள், புதிதாக அமைக்கப்படும் தொழிற்பூங்காக்கள நன்கு இணைக்கப்பட்ட பாதைகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வசதிகளை வழங்குகின்றன. இது FMCG துறை நிறுவனங்களை மட்டும் அல்லாமல் பிற துறை நிறுவன முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications