தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: Exit Poll முடிவுகள விட்டு தள்ளுங்க!! மே 4-இல் பல சர்ப்பிரைஸ் காத்திருக்கு..!!

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் வரும் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த முறை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் என நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் பல சர்ப்பிரைஸ்களை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: Exit Poll முடிவுகள விட்டு தள்ளுங்க! மே 4-இல் பல சர்ப்பிரைஸ் காத்திருக்கு

இந்த சூழலில் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில், பல்வேறு நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன.

பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் திமுக கூட்டணி - 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி - 65 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தவெக - 18 முதல் 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜேவிசி நிறுவனம் திமுக கூட்டணி - 75 முதல் 95 தொகுதிகளில் வெற்றி ,அதிமுக கூட்டணி - 128 முதல் 147 தொகுதிகளில் வெற்றி, தவெக - 8 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் திமுக கூட்டணி - 92 முதல் 110 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூடணி - 22 முதல் 32 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தவெக - 98 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அறிவித்துள்ளது.

மெட்ரிஸ் நிறுவனம் திமுக கூட்டணி - 122 முதல் 132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி - 87 முதல் 110 தொகுதிகளிலும், தவெக - 10 முதல் 12 தொகுதிகளிலும் வெல்லும் என கணித்துள்ளது.

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் திமுக கூட்டணி 120 முதல் 140 தொகுதிகளில் வெல்லும் என கூறியுள்ளது. அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி , தவெக 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி, மற்ற கட்சிகள் 4 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது என கூறுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: Exit Poll முடிவுகள விட்டு தள்ளுங்க! மே 4-இல் பல சர்ப்பிரைஸ் காத்திருக்கு

பிரஜா போல்ஸ் நிறுவனம் திமுக கூட்டணி 148 முதல் 168 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கிறது. அதிமுக கூட்டணி 61 முதல் 81 தொகுதிகளில் வெல்லும் என்றும், தவெக 1 முதல் 9 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணித்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆர்வமாக இருந்த நிலையில் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஒவ்வொரு விதமான முடிவுகளை தெரிவித்து இருக்கின்றன. திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று பெரும்பான்மையான முடிவுகள் கூறுகின்றன. ஆனால் சில கருத்துக்கணிப்புகள் தவெக எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான இடங்களை கைப்பற்றும் முக்கிய அரசியல் சக்தியாக உருவாகும் என கூறுகின்றன.

Also Read

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த தேர்தலில் திமுக 120க்கும் அதிகமான இடங்களில் வெல்வதற்கும், அதிமுக கூட்டணி 85க்கும் அதிகமான இடங்களில் வெல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தவெக 25க்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இருந்தாலும் தேர்தல் முடிவுகள் , தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளோடு ஒத்துப் போகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த தேர்தலில் பெரும்பாலான குடும்பங்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் வாக்கு யாருக்கு சென்றது , குடும்பத் தலைவிகளின் வாக்கு யாருக்கு சென்றது என்பது தான் முடிவினை தீர்மானிக்க போகும் காரணிகளாகவே இருக்கின்றன.

Recommended For You

இவை திமுகவிற்கும் அதிமுகவிற்கும் சென்றதா அல்லது விஜய்க்கு சென்றதா என்பது மே நான்காம் தேதி அன்று தான் தெரியவரும். பெரும்பாலான சமயங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் உண்மையான தேர்தல் முடிவுகளும் ஒத்துப் போவது கிடையாது. ஏனெனில் மக்கள் எப்போதுமே ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஆட்சிக்கு வர ஆர்வம் காட்டுபவர்களுக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருவார்கள். அந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் என்ன என்பது மே 4ஆம் தேதி தான் முழுமையாக தெரியவரும்.

தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்தவரை கடந்த 2021 ஆம் ஆண்டு பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவித்தன, அது ஏறக்குறைய அப்படியே நடந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானாலும் அதிமுக தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அந்த வகையில் பார்க்கும்போது இந்த தேர்தல் முடிவுகளும் பல்வேறு சர்ப்ரைஸ் நிறைந்ததாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+