இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் நாட்டின் வளர்ச்சிக்கு மின்சாரம், எரிபொருளின் தேவை அதிகமாக உள்ளது. இதேசூழ்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், மின்சார உற்பத்தியில் சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் உற்பத்தி செய்ய வேண்டும் என நாடு அளவிலும், மாநில அளவிலும் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தியில் நீண்ட காலமாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வரும் வேளையில், தற்போது தமிழ்நாட்டிற்கு புதிய மகுடம் கிடைத்துள்ளது.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் 30, 2024 மாத நிலவரப்படி, தமிழ்நாட்டின் மொத்தம் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் திறன் 22,161 மெகாவாட் (MW) ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தானும், 2வது இடத்தில் குஜராத்-ம் உள்ளது. இவ்விரு மாநிலங்களுக்கு வெறும் 500 மெகாவாட் வித்தியாசம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கும் குஜராத்துக்கும் சுமார் 5000 மெகாவாட் வித்தியாசம் உள்ளது.
தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆதாரங்களின் பட்டியல்:
காற்றாலை மின்சாரம் - 10608.34 மெகாவாட்
பயோ பவர் - 1048.45 மெகாவாட்
சோலார் பவர் - 8332.46 மெகாவாட்
ஹைட்ரோ பவர் - 2301.25 மெகாவாட்
புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம்: புதுப்பிக்கத்தக்க மின்சாரம் என்பது மீண்டும் மீண்டும் உருவாக்கக்கூடிய இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த எனர்ஜியாகும். இது அனல் மின் நிலையங்கள் போன்று மின்சார உற்பத்தியில் பூமியை மாசுபடுத்துவதில்லை. மேலும், நிலக்கரி போன்ற புதைபடி எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைத்து, கிளீன் எனர்ஜி நோக்கி செல்ல புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உதவுகிறது.
தமிழ்நாட்டின் முன்னேற்றம்: தமிழ்நாடு நீண்ட காலமாகப் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் துறையில் அதிகப்படியான கவனத்தை செலுத்துவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து இத்துறையில் முதலீட்டை ஈர்த்து வருகிறது. மேலும் இத்துறை முதலீட்டை ஈர்க்க நீண்ட கால அடிப்படையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சோலார் மின்சார உற்பத்தி மட்டும் அல்லாமல் சோலார் பேனல் உற்பத்தியிலும் அதிகப்படியான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மீது மக்களுக்கு இன்றைய விழிப்புணர்வு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டத்தில் Windmill park அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக, தமிழ்நாடு தனது மின்சார தேவையில் ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதியைப் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் இந்த ஆண்டு மின்வெட்டு குறைவாகக் கொண்ட மாநில பட்டியலிலும் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு புதுப்பிக்கத்தக்க மின்சாரம் துறையில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கும், அதன் திறனை மேலும் அதிகரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மின்சாரத்தை உறுதி செய்ய முடியும். இந்த வேகத்தில் விரைவில் குஜராத், மகாராஷ்டிராவைத் தமிழ்நாடு முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications