தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 2வது நாள் முடிவில் மொத்தம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்று முக ஸ்டாலின் அறிவித்தார். இந்த முதலீடுகள் மூலம் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், மறைமுக வேலைவாய்ப்புகளையும் சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தச் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுக்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய முதல் இமாலய சாதனை செய்துள்ளார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா-வை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதலீட்டாளர் மாநாடு 2024 ஹைலைட்ஸ் ஆக முக்கிய முதலீட்டுத் திட்டங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
- குஜராத்தைச் சேர்ந்த IRM எனர்ஜி அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 858 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- தைவான் நாட்டை சேர்ந்த லாங் யின் (Long Yin) இன்வெஸ்ட்மென்ட்ஸ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிரீன்ஃபீல்ட் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலையை 500 கோடி செலவில் அமைக்க உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதி அளித்து தமிழக அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- பாரத்ஃபோர்ஜ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 1,000 கோடி முதலீட்டிற்காகத் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய திட்டத்தில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

- தொழிற்துறை ஆட்டோமேஷன் பிரிவில் முன்னோடியாக இருக்கும் Rockwell Automation தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- மஹிந்திரா குழுமம் சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டியில் மஹிந்திரா தொழில்துறை பகுதியில் 1,800 கோடி மதிப்பிலான முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
- சுற்றுலா துறையில் எவ்விதமான முதலீடும் பெறாதது வருத்தும் அளிக்கும் விஷயம். இப்பிரிவில் ஹோட்டல், தீம்பார்க் உட்பட பல விஷயங்களில் முதலீடு எதிர்பார்க்கப்பட்டது.
- TAFE குழுமம் தமிழ்நாட்டில் ஒரு அதிநவீன வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதியைச் சென்னையில் அமைக்கும்.
- சென்னை மற்றும் தூத்துக்குடியில் அடுத்த 2 ஆண்டுகளில் 1,900 கோடி ரூபாய் முதலீடு செய்ய SPIC குழுமம் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் உறுதியளித்துள்ளது.
- வெல்ஸ்பன் குழுமம் தமிழ்நாட்டில் அடுத்த 4-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது
- திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கரூர் மற்றும் தேனி மாவட்டங்களில் 300 மெகாவாட் சோலார் மற்றும் 200 மெகாவாட் காற்றாலை திட்டங்களை அமைப்பதற்காக டெல்லியை சேர்ந்த சன்ஷூர் எனர்ஜி நிறுவனம் 3,150 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்ய தமிழக அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- டெல்லியைச் சேர்ந்த ஆட்டோமோட்டிவ் நிறுவனமான ஆனந்த் குழுமம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 987 கோடி மதிப்பிலான முதலீட்டில் வாகன மற்றும் EV உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 1340 வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும்.
- ஹிந்துஜா குழுமம் அசோக் லேலான்ட், சென்னை மற்றும் ஓசூரில் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய 1,200 கோடி ரூபாய் முதலீடு ஒப்பந்தம் செய்துள்ளது.
- ரியல் எஸ்டேட் துறையின் முன்னணி நிறுவனமான பிரிகேட் குரூப் அடுத்த 3-4 ஆண்டுகளில் 25,000 பேருக்கு வேலை வாய்ப்புகளுடன் சென்னையில் உயரமான குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்களில் 3,400 கோடி முதலீட்டு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
- லீப் கிரீன் எனர்ஜி ஒருங்கிணைந்த கிரீன் ஹைட்ரஜன் மின் சேமிப்பு ஆலையை அமைக்கத் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.17,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 3,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமான Saint Gobain காஞ்சிபுரத்தில் கிரீன்ஃபீல்ட் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ரூ 3,400 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதோடு
காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு மாவட்டத்தில் தற்போதுள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
- கோயம்புத்தூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் KGISL, தமிழ்நாடு அரசாங்கத்துடன் 1.6 மில்லியன் சதுர அடியில் IT பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- Indocool Composites திருச்சியில் 4 கட்டங்களில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய காற்றாலை உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. காற்றாலை உற்பத்தியில் திருச்சி புதிய உயரத்தை இதன் மூலம் அடைய வாய்ப்புள்ளது.
- அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமேஷன் நிறுவனமான FANUC, சென்னையில் அதனுடைய ரோபோ அனுபவ மையத்தை அமைக்க உள்ளது.
- அசோக் லேலண்ட் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- SIFY 2500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- பார்மா நிறுவனமான கேப்லின் பாயின்ட் உற்பத்தி தளத்துடன் R&D சென்டர் அமைக்க 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 1500 பேருக்கு வேலை கிடைக்கும்.
- ராம்கோ 990 கோடி ரூபாய் முதலீடு செய்ய முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- பின்லாந்து நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Salmcop சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் 2,271 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் 15,000+ பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

- சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் புதிய ஜிசிசி அலுவலகத்தை அமைக்க உள்ளது. சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சென்னையில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் இன்னோவேஷன் சென்டர் அமைக்க எல்&டி 3,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதேபோல் Shell மார்கெட்ஸ் இந்தியா தமிழ்நாடு முழுவதும் ரூ.1,070 கோடி முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காகவும், சென்னையில் GCC அலுவலகத்தை விரிவுபடுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- திருச்சி மாவட்டத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 3500 மெட்ரிக் டன் ஏரோஸ்பேஸ் துறைக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ஜேஎம் இன்ஃப்ரா அதாவது ஜிண்டால் டிஃபென்ஸ் நிறுவ உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

- கோயம்புத்தூர் மாவட்டத்தில் 750 கோடி முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான உதிரிப்பாக உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ZF விண்ட் டர்பைன், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
- சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து சுமார் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளது.
- Citroen மற்றும் Chrysler குழும நிறுவனமான Stellantis Group திருவள்ளூர் மாவட்டத்தில் ICE மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்திக்காகக் கூடுதலாக 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
- தமிழ்நாட்டின் பிரபலமான காவேரி மருத்துவமனை தமிழகம் முழுவதும் 7500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை அமைக்க ரூ.1,200 கோடி முதலீடு செய்ய உள்ளது.
- சென்னையில் போரூர் DLF-ல் இருக்கும் போயிங் நிறுவனத்தின் குளோபல் இன்ஜினியரிங் ஹப்-ஐ விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருக்கும் போயிங் அலுவலகத்தில் அந்நிறுவனம் கூடுதலாக 300 கோடி ரூபாய் முதலீடு செய்து 1100 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது.
- சிங்கப்பூரைச் சேர்ந்த செம்கார்ப் 36,238 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிரீன் ஹைட்ரஜன் ஆலையை அமைக்க உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 1511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- குளோபல் ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான யுபிஎஸ் (UPS), சென்னையில் உள்ள டெக் சென்டரை விரிவுபடுத்த 18 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. சமீபத்தில் தான் அதன் தொழில்நுட்ப மையத்தைச் சென்னையில் திறந்தது, 2024 க்குள் 1000 பணியாளர்களை பணியமர்த்தும் இலக்கை கொண்டு உள்ளது.

- தைவான் நாட்டைச் சேர்ந்த Pou Chen (High Glory) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,302 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது.
- தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபெங் டே விழுப்புரம் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் காலணிகளை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- சிங்கப்பூரைச் சேர்ந்த ஜாங் பு பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.48 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
- அதானி குழுமம் தமிழ்நாட்டில் சுமார் 42,768 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இதில் அதானி கிரீன் எனர்ஜி 24,500 கோடி ரூபாயும், அதானி கானெக்ஸ் - 13,200 கோடி ரூபாயும், அதானி டோட்டல் கேஸ் 1568 கோடி ரூபாயும், அம்புஜா சிமெண்ட் 3,500 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.
- CPCL நாகப்பட்டினத்தில் பெட்ரோ கெமிக்கல் திட்டத்திற்காக 17,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 2,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
- இந்தோனேசியாவைத் தளமாகக் கொண்ட TKG டேக்வாங் நிறுவனம் 1,250 கோடி முதலீடு செய்து 9,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கிரீன்ஃபீல்ட் தோல் அல்லாத உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
- மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னையில் 2,740 கோடி முதலீட்டில் புதிய டேட்டா சென்டர் அமைக்க உள்ளது.

- டாடா கெமிக்கல்ஸ் ராமநாதபுரத்தில் சிறப்பு ரசாயன உற்பத்தி தளத்தை அமைக்க 1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
- Titagarh Rail Wheels நிறுவனம் திருவள்ளூரில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க, 1,850 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெஸ்டோ நிறுவனம் நியூமேடிக் உதிரிப்பாகங்கள் உற்பத்தி ஆலையை அமைக்க 520 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
- தமிழ்நாட்டில் பிரபலமான ராம்ராஜ் (ENES ராம்ராஜ்) குழுமம் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளை அமைக்க உள்ளது. இதன் மூலம் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
- சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் TAFE 500 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக விரிவாக்க பணிகளை செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications