நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளில் மிக முக்கியமானது வேலைவாய்ப்பின்மை. எனவே வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு "வேலை வாய்ப்பு உருவாக்க திட்டம் (UYEGP)" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்களையும் சொந்த தொழில் முனைவோராக மாற்றும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முத்ரா கடன், பிஎம் விஸ்வகர்ம யோஜனா திட்டம் போன்ற திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். அப்படி வேலைவாய்ப்பை அதிகரிக்க செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றுதான் UYEGP திட்டம்.
"Unemployed Youth Employment Generation Programme" என்று சொல்லப்படுகிற இந்தத் திட்டம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்ய இருக்கும் இளைஞர்களுக்கு உதவவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெரும்பாலான படித்த இளைஞர்கள் அவர்கள் விரும்பும் வேலை கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையை முற்றிலும் மாற்றி அவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் நிதி ரீதியாக உதவி செய்து தொழில் வாய்ப்பை வழங்க ரூ.15 லட்சம் வரையிலான கடன் உதவி வழங்கப்படுகிறது.
கடன் பெறுவதற்கான தகுதி: வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் மூலம் லோன் பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் 18 முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் இளைஞர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. மேலும் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் வேறு எந்த கடன் திட்டத்தின் மூலமும் மானியம் பெற்றிருக்கக் கூடாது. மேலும் பெண்கள் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி போன்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். லோனுக்கு 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
எவ்வளவு கடன் பெறலாம்?: அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை மானியமாக பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி துறைக்கு ரூ.15 லட்சமும், சேவைகள் மற்றும் வணிக பிரிவிற்கு ரூ.5 லட்சமும் கடனாக பெற்று தொழில் துவங்க முடியும்.
நவம்பர் 30 நிலவரப்படி வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் மூலம் லோன் பெறுவதற்கு 8,150 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 1522 பேருக்கு லோன் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் உடல் ஊனமுற்ற நபர்களின் எண்ணிக்கை 84 ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது?: லோன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.


Click it and Unblock the Notifications