சென்னை: இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது தொழில்துறை.
தமிழ்நாட்டின் தொழில்துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய தொழில் துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அமைச்சரவை கூட்டத்தில் தொழில்துறை முதலீட்டு ஒப்புதல் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். இதன்படி உற்பத்தி, பொறியியல் ,வடிவமைப்பு ,தொழில்நுட்ப ம், ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி , ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு , தகவல் தொழில்நுட்பம் மற்றும் உணவு வேளாண் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளிலும் 1937.76 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு ம தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனக் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் 13,409 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக பேபால் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தன. அந்த வகையில் தமிழக அரசு வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டும் கையெழுத்து இடுவதில்லை மாறாக அந்த முதலீடுகளை வேலை வாய்ப்புகளாக மாற்றி வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.
புதிய முதலீடுகள் மற்றும் முக்கிய திட்டங்களின் விரிவாக்கங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அவர் கூறியிருக்கிறார் . தமிழக அமைச்சரவையின் இந்த ஒப்புதல் மூலம் பேபால் நிறுவனம் சென்னையில் தன்னுடைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெசின் லேர்னிங் அலுவலகத்தை அமைக்க இருக்கிறது இதன் மூலம் ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.
இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இல்லாத வகையில் 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு இலக்கத்தை எட்டி 11.19 சதவீதமாக இருக்கிறது. தமிழக அரசும் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்க பல நடவடிகைகளை எடுத்து வருகிறது. அண்மையில் கூட வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய ஓன்றரை ஆண்டு காலத்திலேயே ஆலையின் முதல்கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசு எலக்ட்ரானிக்ஸ், ஐடி, ஜிசிசி, ஜவுளி, காலணி, செமி கண்டக்டர், வாகன உற்பத்தி என பல துறைகளிலும் நிறுவனங்கள் வந்து தொழில் தொடங்குவது ஊக்குவிக்கிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications