திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 2 குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பரிசை வழங்கியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு தானியங்கி முறையில் நகரும் சக்கர நாற்காலி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதே வேளையில் முகக் குறைபாடுடன் பிறந்த சிறுமி ஒருவருக்கு ஒரு வீட்டையும் பரிசாக வழங்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 9 வயதான தன்யா என்ற சிறுமி தனது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்கள் மூலம் தமிழக முதல்வரை அணுகியுள்ளார். இவர் ஒரு அரிய வகை முகக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். "தன்யாவின் தந்தையான ஸ்டீபன் ஒரு தையல் தொழிலாளி. பள்ளி மற்றும் அக்கம் பக்கத்தினர் யாரும் இவரிடம் பேசவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இவரை ஒதுக்கி வைத்துள்ளனர். அதோடு இந்த குடும்பத்திற்கு வாடகை வீடும் கிடைக்கவில்லை", என்று அமைச்சர் எஸ்.எம்.நாசர் கூறினார்.

2022-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 16-ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவந்தது. அடுத்த நாளே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும், 15 பேர் கொண்ட குழுவை அமைத்து ஒவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு பிரச்சனைகளை கண்காணித்து வந்ததாகவும், கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றும், இன்னும் ஒரு சிகிச்சை நிலுவையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு முதல்வர் அடிக்கடி சென்று இவரை பார்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது தான்யாவிற்கு பள்ளியில் அட்மிஷன் கிடைத்துள்ளது. வாடகை வீடு கிடைக்காமல் அவருடைய குடும்பம் கஷ்டப்படுவதை தெரிந்துகொண்டு பாக்கம் கிராமத்தில் மூன்று சென்ட் நிலத்தில் அவருக்கு வீடும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடத்தின் கீழ் வீடு கட்டி வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று தன்யாவின் பெற்றோர்களான ஸ்டீபன் மற்றும் சௌபாக்கியாவிடம் புதிய வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதே விழாவில் பண்ணவாடு தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான அனுசியா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சக்கர நாற்காலியையும் முதல்வர் பரிசாக வழங்கினார்.
இவர் மூன்று பட்டங்கள் பெற்ற ஒரு பட்டதாரி. மேலும் பகுதிநேர ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். தன் சிரமங்களை விளக்கி சிஎம் செல்லுக்கு கடிதம் எழுதியுள்ளார். "இதன் மூலம் தற்போது ஒரு தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கியுள்ளோம். அவருக்கு ஒரு வேலை வழங்கவும் ஏற்பாடு செய்வோம்", என்று நாசர் கூறியுள்ளார். நிகழ்ச்சிகள் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications