சாமானிய மக்களுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் வங்கிகளில் சென்று கடன் பெறுவது என்பது அத்தனை எளிதான விஷயம் கிடையாது. உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், சொத்து , வருமானம் ஆகியவற்றை கேட்பார்கள். இது தவிர பல்வேறு ஆவண சரிபார்ப்பு என பல நடைமுறைகள் இருக்கும். உடனடியாக நமக்கு கடன் கிடைக்காது .
வங்கி சாராத நிதி நிறுவனங்கள் அல்லது தனியார் கடன் நிறுவனங்களுக்கு சென்றோம் என்றால் கிட்டதட்ட ஒரே நாளிலேயே நமக்கான கடன் தொகையை நாம் வாங்கிவிடலாம். இங்கே கிரெடிட் ஸ்கோர் எல்லாம் கேட்க மாட்டார்கள். ஆனால் இவ்வாறு கடன் வழங்கக்கூடிய வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனை வசூல் செய்வதில் பல அடாவடி நடவடிக்கைகளை கடைபிடிக்கின்றன.

எனவே கடன் வாங்கிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு கடன் வழங்கிய நிறுவனங்களின் அத்துமீறல்களை தடுக்கும் வகையிலும், அடாவடி வசூல் , வட்டி சுரண்டல் , பொதுமக்களை அச்சுறுத்துவது போன்றவற்றை தடுத்து நிறுத்தும் வகையிலும் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது .
தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவன விதிகள் 2025 என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி செயல்படும் எந்த தனிநபர் அல்லது நிறுவனம் கடன் வழங்கும் வேலையில் ஈடுபட்டால் கட்டாயமாக அரசின் ஆன்லைன் போர்ட்டலில் 10,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்திருக்க வேண்டும்.
கடன் வழங்கக்கூடிய நிறுவனத்தின் பெயர் ,முகவரி, அரசின் அனுமதிக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து , 60 நாட்களுக்குள் சான்றிதழ் பெற வேண்டும். அதே போல கடன் வழங்கும் நிறுவனங்கள் 4 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கும், சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கும் ஜாமீன் அல்லது அடமானம் கேட்கக்கூடாது .
கடன் பெற்ற நபர் முழு கடனையும் திரும்ப செலுத்திய 30 நாட்களுக்குள் நிறுவனம் அந்த நபரின் ஆவணங்களை திருப்பி தர வேண்டும் . மேலும் இந்த கடன் பிரச்சனையை தீர்க்க தீர்ப்பாயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த புகார்கள் மீது இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
4 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு அடமானம் தேவையில்லை என்ற அறிவிப்பு சுய தொழில் புரிவோர், சிறு வணிகம் செய்வோருக்கு பெரிய அளவில் பலன் தரும். குறிப்பாக முதன்முறை தொழில் உலகில் கால்பதிப்பவர்கள், சொத்து இல்லாதவர்கள் தொழில் தொடங்க இனி எளிதாக பணம் கிடைக்கும்.
தமிழ்நாடு அரசு சிறு தொழில் புரிபவர்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . குறிப்பாக பெண்கள் தாங்கலாக சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் அதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு அனைத்து வகையான நிதி உதவிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. இதற்கு ஏற்ற வகையில் சுய உதவி குழுக்களுக்கான பிணையற்ற கடன் பெறும் உச்சவரம்பை தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறது.
எனவே சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் தங்களுடைய சுய தொழில் மற்றும் நிறுவன மேம்பாடு நோக்கங்களுக்காக இனி 10 லட்சம் ரூபாய் வரை எதையும் பிணையாக கொடுக்காமல் கடன் பெற முடியும் . தங்களிடம் அடமானமாக வைக்க சொத்து எதுவுமில்லை, நகை உள்ளிட்டவை இல்லை என்பவர்கள் கூட இனி எளிதாக கடன் பெற்று தொழில் தொடங்க முடியும்.
More From GoodReturns

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?



Click it and Unblock the Notifications