தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது குறித்து சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் தற்போது மின் கட்டண உயர்வுக்கு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து இன்று முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
8 ஆண்டுகளுக்கு பின் உயர்வு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் 2026 - 27 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்றும், 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்திற்கு எழுதிக் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வின் முழு விவரங்கள்
இந்த நிலையில் புதிய மின் கட்டணத்தை எவ்வளவு யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் அதிகம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
200 யூனிட்
100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின் கட்டணம் இல்லை. 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என 2 மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
300 யூனிட் முதல் 500 யூனிட் வரை
300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு ரூ.145 அதிக கட்டணமும், 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு 295 ரூபாய் அதிக கட்டணமும் நுகர்வோர் கட்ட வேண்டும். அதேபோல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு 595 ரூபாய் அதிக கட்டணம் கட்ட வேண்டும்.
600 யூனிட் முதல் 900 யூனிட் வரை
600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 310 ரூபாயும், 700 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2மாதங்களுக்கு கூடுதலாக 550 ரூபாயும் 800 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 790 ரூபாயும் 900 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 1130 ரூபாயும் கட்ட வேண்டும்.
மின்வாரிய இணையதளம்
மேலும் மின் கட்டண உயர்வு குறித்த அனைத்து தகவல்களும் மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண உயர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக்த்தில் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ள அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications