இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வருடா வருடம் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவது வழக்கம். அதன்படி இந்த முறையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன்களையும் அதிகாரிகள் ஏற்கனவே வீடு வீடாக சென்று வழங்கியுள்ளனர். இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில் சென்னையின் சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை அருகே இருக்கும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்போடு 1,000 ரூபாய் ரொக்கம் சேர்க்கப்படவில்லை.

இதற்கு முன்னர் பொங்கல் பரிசாக 1,000 ரூபாயில் தொடங்கி 2500 ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
மாறாக 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. அதோடு ஏற்கனவே வழங்கியதைப் போல் அல்லாமல் முந்திரி பருப்பு, திராட்சை போன்ற பொருட்களும் இந்த பரிசு தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. தமிழக நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்து பணத்தை நீக்கி விட்டதாகவும் சமீபத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு 2025: தமிழ்நாடு அரசு ரூ.249.76 கோடி நிதியை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஒதுக்கியுள்ளது. இந்த முயற்சிக்காக மேலும் 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலையையும் பரிசு பொட்டலத்துடன் விநியோகிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக இதுவரையில் 95 சதவீதம் பேருக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரையில் ரேஷன் கடைகளிலிருந்து பொங்கல் பரிசு பொட்டலங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதோடு டோக்கன்களிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பரிசு பொட்டலங்கள் பெறுவதற்கான தேதி மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் தொகுப்பை பெறலாம்.
இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானாலும் தமிழ்நாட்டு மக்களே 1,000 ரூபாய் வழங்கப்படுமா? என்ற அந்த ஒரு அறிவிப்புக்காக காத்திருந்தனர். ஆனால் இது போன்ற நபர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications