தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது வழங்கப்படும் "பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா" என்ற திட்டத்தை தமிழக அரசு அப்படியே நடைமுறைப்படுத்தாது என்று முன்பே தெரிவித்திருந்தார். கைவினை கலைஞர்களுக்காகவே பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும் அனைத்து சமூகத்தினரையும் இந்த திட்டம் ஆதரிக்கவில்லை என்று கூறி முதல்வர் ஸ்டாலின் தொழில்துறை அமைச்சரான ஜிதன் ராம் மாஞ்சிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். தற்போது இந்தத் திட்டத்திற்கு பதிலாக தமிழகத்தில் "கலைஞர் கைவினை திட்டம்" என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
பெண்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் என நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அரசு சலுகைகளை வழங்குகிறது. அப்படி கைவினை கலைஞர்களுக்காக பிரத்தியேகமாக "கலைஞர் கைவினைத் திட்டம்" என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிரதான் மந்திரி விஸ்வகர்ம யோஜனா என்ற திட்டத்தின் மூலம் எந்தவிதமான பிணையமும் இல்லாமல் மத்திய அரசின் மூலம் கடன் பெறலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கடனுக்கான வட்டி விகிதம் வெறும் 5 சதவீதம் மட்டுமே. ஆனால் இந்த திட்டம் ஜாதி சார்ந்ததாக இருப்பதாகவும், தமிழ்நாட்டுக்கு இந்த திட்டம் ஒத்துவராது என்று கூறி தற்போது புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

"பிரதான் மந்திரி விஸ்வகர்ம யோஜனா" திட்டத்திற்கு மாற்றாகத் தான் கலைஞர் கைவினை திட்டம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு 25% மானியம் மற்றும் 5 சதவீத வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. சுமார் 25 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான கடன் வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல ஆண்டுதோறும் 10,000 கைவினைக் கலைஞர்களுக்கு பலனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படவுள்ளது.
யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: பூட்டு தயாரிப்பவர்கள், படகு செய்பவர்கள், உலோக வேலை செய்பவர்கள், சிற்பிகள், கற்சிலை வடிவமைப்பாளர்கள், கண்ணாடி வேலை செய்பவர்கள், மண்பாண்டங்கள் செய்பவர்கள், மீன்வலை தயாரிப்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள், நகை செய்பவர்கள், சிகை அலங்காரம் மற்றும் அலகுக்கலை, துணி வெளுக்கும் தொழிலில் இருப்பவர்கள், இசைக்கருவிகள் தயாரிப்பவர்கள், துணி நெய்பவர்கள், துணிகளில் கலை வேலைபாடுகள் செய்பவர்கள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடும் வேலை செய்பவர்கள், பாசிமணி, மூங்கில், சணல், பனை ஓலை, பிரம்பு போன்றவற்றை கொண்டு வேலை செய்பவர்கள், ஓவியம் வரைதல், வர்ணம் பூசுதல், கண்ணாடி பொருட்களைக் கொண்டு அலங்கரித்தல், சூதை வேலை செய்பவர்கள் போன்ற 25 வகையான தொழில்களை செய்யும் கைவினைக் கலைஞர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.
35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் இந்தத் திட்டம் உதவிகரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தின் மூலம் லோனும் வழங்கப்பட்டு அவர்களுக்கான ஸ்கில் ட்ரைனிங்கும் வழங்கப்படவுள்ளது. கலைஞர் கைவினை திட்டத்திற்கு விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications