கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் புதிதாக மினி பேருந்து சேவைகளை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசினை பொருத்தவரை தற்போது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது ஏற்கனவே ஓசூரில் டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய ஆலைகளை அமைத்துள்ளன.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அரசு தொழில் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மினி பேருந்து சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கு அது அரசு முடிவு
இதன்படி ஓசூரில் 17 மினி பேருந்துகளுக்கும் கிருஷ்ணகிரியில் 12 மினி பேருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் வாகன போக்குவரத்து இணைப்பு இல்லாத பகுதிகளையும் இணைக்கும் நோக்கில் இப்படி ஒரு முடிவினை தமிழ்நாடு அரசு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு தரப்பில் மாநிலத்தில் மினி பேருந்து சேவைகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் முதன்முறையாக மினி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டது. பின்னாளில் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளின் மீண்டும் மினி பேருந்து சேவையை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன்படி டிசம்பர் மாதம் முதல் மினி பேருந்து சேவைகளை தொடங்கும் பணியில் போக்குவரத்து துறை மும்மரமாக இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் மினி பேருந்து சேவை தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒரு கிராமத்தில் குறைந்தது 100 குடும்பங்கள் இருந்து இதுவரை அங்கு அரசு பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ இயக்கப்படாமல் இருந்தால் அங்கே மினி பேருந்து சேவைகள் கொண்டுவரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
70 சதவீதம் பேருந்து வசதியற்ற பகுதிகளையும் 30 சதவீதம் பேருந்து வசதி இருக்கும் பகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது. புதிய திட்டத்தின் படி 25 கிலோ மீட்டருக்குள் இயக்குவதற்கு மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதில் 17 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாகவும் 8 கிலோமீட்டர் பேருந்து சேவை இருக்கும் வழித்தடமாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications