கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30-க்கு சன்ன ரக அரிசி! கள்ளச்சந்தை விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு!

சில காலமாகவே தமிழகத்தில் அரிசி விலை மட்டும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை எளியவர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு.. அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சன்னரக அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவு அங்காடிகள் மூலம் சந்தைகளில் விற்பனை செய்வதை காட்டிலும் விலை குறைவாக வழங்கி வருகிறது.

முதல் கட்டமாக கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி அன்று சென்னையில் 30 இடங்களில் 1 கிலோ சன்ன ரக அரிசி ரூ.30-க்கு வழங்கப்பட்டது. இனி வரும் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு அங்காடிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களுடைய தேவைக்கு ஏற்ப 5 கிலோ வரையிலான அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30-க்கு சன்ன ரக அரிசி! கள்ளச்சந்தை விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு!

தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த 995 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 250 கூட்டுறவு அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதுவரையில் 34 மாவட்டங்களில் இயங்கி வரும் இந்த விற்பனை நிலையங்களில் 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 19 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.

சன்ன ரக அரிசி மட்டுமல்ல புழுங்கல் அரிசி கிலோ ஒன்று ரூ. 60-க்கும், துவரம்பருப்பு கிலோ 1 ரூ.130-க்கும், உளுத்தம் பருப்பு கிலோ 1 ரூ.140-க்கும், பூண்டு 1 கிலோ ரூ.240-க்கும், மிளகாய் கிலோ 1 ரூ.330-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்காடிகள் மூலமாக வழங்கப்படும் 41 அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலையை தொடர்ந்து நுகர்வோர் பாதுகாப்பு துறையினர் கண்காணித்து வருகின்றனர். இவற்றை பதுக்கி வெளியில் விற்பனை செய்தாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

அங்காடிகள் திறக்கப்படாமல் இருந்தாலோ அல்லது 30 ரூபாய்க்கு அதிகமாக அரிசி விற்பனை செய்தாலோ, தரமில்லாத அரிசி வழங்கினாலோ பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். ஒவ்வொரு கூட்டுறவு அங்காடிகளுக்கும் தனியாக புகார் நம்பர் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருப்பவர்கள் கீழ்பாக்கம், மயிலாப்பூர், நந்தனம், ராயப்பேட்டை, கே.கே.நகர், போரூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோபாலபுரம், தாம்பரம் மேற்கு ஆகிய பகுதிகளில் இருக்கும் அமுதம் பல்பொருள் அங்காடி மூலம் ரூ.30-க்கு சன்ன ரக அரிசி பெறலாம்.

இதைத் தவிர சென்னையின் பிற பகுதிகளிலும் 5 கிலோ வரையிலான சன்னரக அரிசியை பெறலாம். பெரம்பூர், வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களில் இயங்கி வரும் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலமாகவும் அரிசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+