சென்னை: தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ சார்பாக சென்னை, மதுரை, கோயம்புத்தூரில் தொழில்துறைகளுக்கான ஆய்வு பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக டிடி நெக்ஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தற்போது நவீன தேவைகளுக்கு ஏற்ப கல்லூரியில் பயிலும் மாணவர்களை ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு தொழில்துறைகளை சார்ந்த ஆய்வு பூங்காக்களை சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தோடு இணைந்து இந்த ஆய்வு பூங்காக்களை நிறுவ இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி துறையின் உயர் அதிகாரி ஒருவர் டிடி நெக்ஸ்டுக்கு அளித்துள்ள பேட்டியில் மாணவர்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, வாகன உற்பத்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் இந்த ஆய்வு பூங்காக்கள் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். கல்லூரியில் பயிலும் போதே மாணவர்களுக்கு தொழில் முனைவுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் வளர்ந்து வரும் நிறுவனங்களோடு இணைந்து முக்கியமான ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த ஆய்வு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்படும் என தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .தற்போதைக்கு சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மூன்று நகரங்களில் இந்த ஆய்வு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன என்றும் இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அவர்களின் ஆய்வு மற்றும் அது தற்போதைய தொழில்துறையோடு எவ்வாறு ஒத்துப் போகிறது அதேவேளையில் தற்போது தொழில்துறையினருக்கு எந்த பிரிவுகளில் எல்லாம் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரக்கூடிய ஒரு முயற்சியாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதனால் மாணவர்கள் செய்யக்கூடிய ஆய்வுகளும் அதனால் கிடைக்கும் முடிவுகளும் நேரடியாக தொழில்துறைக்கு பயன்படும். இவ்வாறு கல்லூரியில் பயிலும்போதே மாணவர்களுக்கு தொழில் துறையினரோடு ஒரு தொடர்பு ஏற்படும் போது எதிர்காலத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பிரகாசமாகிறது என தெரிவித்துள்ளார்.
டிட்கோவை பொறுத்தவரை ஆய்வு பூங்காக்களை மேம்படுத்துவதில் நீண்ட அனுபவம் உள்ளது என்பதால் தமிழ்நாடு அரசு டிட்கோவுடன் இணைந்து இதை செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் எனக் கூறப்படுகிறது. கூடிய விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழக அரசு இதற்கான நிதிகளை ஒதுக்கீடு செய்த உடன் இந்த ஆய்வு பூங்காக்களை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications