இந்த ஆண்டு இரண்டாவது அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றொரு உற்சாகமான செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாநில அரசு ஊழியர்களுக்கான சிறப்பு தீபாவளி போனஸை விரைவில் வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் இரண்டாவது அகவிலைப்படி உயர்வில் 3 சதவீத அதிகரிப்பை எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால் அகவிலைப்படி மொத்தமாக 53 சதவிதாமாக உயர்த்தப்படும் என்று கருதுகின்றனர். உதாரணமாக ஒரு அரசு ஊழியரின் சம்பளம் 50,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால் அவருக்கு மாதம் 1,500 ரூபாய் அதிகமாக கிடைக்கும், அப்படி பார்த்தால் ஆண்டுக்கு 18,000 ரூபாய் சம்பள உயர்வு இருக்கும். மேலும் ஊழியர்களுக்கு இரட்டை போனஸ் வழங்க தமிழக அரசு தயாராவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அறிவிப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மார்ச் மாதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அகவிலைப்படியை 4% உயர்த்தியது. அதன்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான உத்தரவை வெளியிட்டார்.
அரசு ஊழியர்களுக்கான மற்றொரு அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பு தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்புக்கு தேவையான ஆவணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்காக அதிகாரிகள் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.மேலும் அலுவலர் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் மாநில அரசு நிதியில் கூடுதலாக ரூ. 3,000 கோடி செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், அலுவலர் அல்லாத ஊழியர்கள் ரூ. 7,000 போனஸ் பெற்றனர், மேலும் இந்த ஆண்டு அந்த தொகையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
அரசு தரப்பில் 2-வது அகவிலைப்படி உயர்வு குறித்த தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. அப்படி வெளியிடப்பட்டால் இதன் மூலம் 1 கோடி அரசு ஊழியர்களின் குடும்பங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications