தமிழக அரசு சார்பில் மக்களுக்குப் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்தின்கீழ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பயன் பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அதேபோல பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தொகையும் வழங்கப்படும். இந்த முறையும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து தமிழக மக்கள் கொண்டாடுவர். அந்த வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு ஊர்களில் இருக்கும் நபர்களும் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஜல்லிக்கட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும். இந்தாண்டும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்துள்ள நபர்களுக்கும் ரூ. 1,000, 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத் தண்டு ஆகியவை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வருமான வரி செலுத்துபவர்களைத் தவிர்த்து உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது. இந்த முறை அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத் தண்டு, ரூ. 1,000 ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். மேலும், கலைஞரின் "மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தின்கீழ் பெண்களுக்கு 1000 ரூபாயானது ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. பொங்கல் பண்டிகையால் இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்னதாகவே ஜனவரி 10, 2024 அன்று ரூ. 1000 வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உதவித்தொகை, இந்த ஆண்டு கொடுக்கப்படும் பரிசு உட்பட ரூ. 2000 வழங்கப்பட இருப்பதால் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications