விஜயின் உண்மையான 'வாத்தி ரெய்டு'.. அரசு காண்ட்ராக்ட் எடுப்பதில் Big Change.. அரசுக்கு ஏகப்பட்ட லாபம்.. எப்படி?

சென்னை: தமிழ்நாடு அரசு அனைத்து பொதுப்பணி துறை காண்ட்ராக்ட்களையும் திறந்த முறையில் அனைவரும் பங்கேற்கும் முறையில் செயல்படுத்தியுள்ள காரணத்தால் முன்பு கணிக்கப்பட்ட 'திட்ட தொகையை' காட்டிலும் 10 சதவீதம் அதிக தொகைக்கு கொடுக்கப்பட்ட காண்ட்ராக்ட், தற்போது 20-30 சதவீதம் குறைவான தொகைக்கு காண்ட்ராக்ட் கோரப்படுவதாக (bidding) தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பெரிய அளவிலான நிதி சேமிப்பு கிடைத்துள்ளது தெளிவாகிறது.

தமிழ்நாட்டின் முதல்வரான விஜய் பதிவியேற்றிய நாளில் தான் கிளீன் ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி என தொடர்ந்து கூறுவது மட்டும் அல்லாமல் இதற்கான பல கட்டமைப்புகளை உடைத்து அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவும், அனைவரும் பங்கேற்கும் முறையிலும் செயல்பட ஒவ்வொரு துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் துவக்க புள்ளியாக பொதுப்பணி துறையில் காண்ட்ராக்ட் எடுப்பதில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது.

விஜயின் உண்மையான 'வாத்தி ரெய்டு'.. அரசு காண்ட்ராக்ட் எடுப்பதில் Big Change.. அரசுக்கு ஏகப்பட்ட லாபம்.. எப்படி?

முன்பு அரசு திட்டங்களின் ஒப்பந்தங்கள் மிகவும் சிறிய வட்டத்திற்குள் நடந்து வந்தது. இதனால் ஒப்பந்த தாரர்கள் மத்தியில் கூட்ட சேர்ந்து ஒப்பந்தம் தங்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் பிட்டிங் செய்வது, முறைகேடான ஏலங்கள் மற்றும் லஞ்சம் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் பெறுவது என நிர்வாக மட்டத்தில் பல மோசடிகள் நடந்து வந்தது.

தற்போது விஜய் தலைமையிலான அரசு, அனைத்து திட்ட ஒப்பந்தங்களும் வெளிப்படையாக அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் போட்டி அதிகமாகியுள்ள காரணத்தால் சென்னை பெருநகர சாலை திட்டங்களுக்கு அரசின் மதிப்பீடுகளை காட்டிலும் 25-30 சதவீதம் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

உதாரணமாக அம்பத்தூர் பகுதியில் ஒரு சாலை பழுது பார்க்கும் பணிக்கு GCC கணிக்கப்பட்ட தொகையின் மதிப்பு 25 லட்சம். இதற்கு 9 பேர் போட்டிப்போட்டனர். ஒருவர் மட்டும் கொடுக்கப்பட்ட மதிப்பை காட்டிலும் அதிக மதிப்புக்கு கோரினார், ஆனால் 8 பேர் கொடுக்கப்பட்ட மதிப்புக்கு குறைவான தொகைக்கு இத்திட்டத்தை கோரியுள்ளனர்.

இந்த காண்ட்ராக்டை சுமார் 25.9 சதவீத குறைவான மதிப்பு அதாவது 17 லட்சம் ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒரு ஒப்பந்தத்தில் மட்டுமே அரசுக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் சேமிப்பு கிடைத்துள்ளது.

இது ஒன்றல்ல தண்டையார்பேட்டையில் 30 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தம் 25 சதவீத குறைவாக தொகைக்கு கோரப்பட்டு உள்ளது, இதோபோல் சோழிங்கநல்லூரில் திட்ட மதிப்பை காட்டிலும் 36 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் கோரப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை சென்னை பெருநகர காண்ட்ராக்டர் அமைப்பின் தலைவர் ராமராவ்-ம் உறுதி செய்துள்ளார்.

இதேவேளையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொதுபணித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காண்ட்ராக்ட் கொடுப்பதில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள், ஒப்பந்தத்திற்காக லஞ்சம் என பல தவறுகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+