சென்னை: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்காக(Tamil Nadu Artificial Intelligence Mission (TNAIM) ) மாநில அரசு 13.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பிரிவின் மையமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் என்பது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்திற்காக முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 13.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது எங்கு பார்த்தாலும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தான் பரவலாக பேசப்படுகிறது.

எனவே செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது .இதன் தலைவராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்பட இருக்கிறார். இதற்கான திட்ட ஆவணத்தை தமிழ்நாடு மின் ஆளுகை முகமை தயாரித்துள்ளது .
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தில் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களும், இந்த துறை சார்ந்த நிபுணர்களும் , செயற்கை நுண்ணறிவு துறையில் தற்போது இயங்கி வரக்கூடிய நபர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட உள்ளனர்.
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் நோக்கமே "Social good by design" என்பது ஆகும். அதாவது இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தின் அடிப்படையில் ஆளுமை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏஐ தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும் என்றும் இதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திறமையான நிர்வாகத்தை வளர்க்க முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு துறை சார்ந்தவர்கள் மற்றும் தனியார் துறையை சார்ந்தவர்கள் கல்வி நிறுவனங்களை சார்ந்தவர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து பங்களிப்பு தரக்கூடிய ஒரு இயக்கமாக இந்த இயக்கம் இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட கணினி உள்கட்டமைப்புகள் ,டேட்டா மையங்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கான அனைத்து வசதிகளையும் இந்த இயக்கம் செய்து தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் நிர்வாகத்தை எளிமைப்படுத்துவது ,குடிமக்களிடையே மின் ஆளுமை பரவலை விரைவுப்படுத்துவது ,தமிழகத்தை ஒரு மேம்பட்ட சமுதாயமாக உருவாக்க அரசுக்கு உதவும் கொள்கைகளை உருவாக்குவது என ஆகியவற்றில் கவனம் செலுத்த இருக்கிறது.
அனைத்து அரசு துறைகளிலிருந்தும் தரவுகளை ஒருங்கிணைத்து துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தி தொழில்நுட்ப நிபுணர் குழுக்களை உருவாக்கி கூட்டு பணிமனைகள் அல்லது கருத்தரங்குகள் மூலம் ஏஐ பயன்பாடுகளை உருவாக்குவதே இதன் உத்தியாக இருக்கும் என அரசு கூறியுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications