ஆவினில் இனி பச்சை பால் பாக்கெட் கிடைக்காதா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்து ப்ளூ, பச்சை, ஆரஞ்சு, ஊதா ஆகிய நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்கிறது. அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் ஆரஞ்சு பாக்கெட்டில் விற்கப்படுகிறது. இதன் விலை சற்று அதிகம். அதே வேளையில் அரை லிட்டர் 20 ரூபாய்க்கு கிடைக்கும் ப்ளூ பால் பாக்கெட் முற்றிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால்.

தமிழ்நாட்டில் அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் ஆவின் பச்சைப் பால். இதன் விலை அரைலிட்டர் 22 ரூபாய். இந்த பாலை தான் பெரும்பாலான மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிக மானியத்தில் இந்த வகை பாலை விற்பனை செய்வதால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் ஆவின் நிர்வாகம் ஆவின் பச்சை பால் விற்பனையை குறைத்து வருவதாகவும், பச்சை பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

ஆவினில் இனி பச்சை பால் பாக்கெட் கிடைக்காதா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

அரை லிட்டர் 22 ரூபாய்க்கு பெரும்பாலான மக்களால் வாங்க கூடிய விலையில் இருக்கும் பச்சை பால் பாக்கெட்டை திடீரென நிறுத்தினால் மக்கள் 20 ரூபாய் ப்ளூ பால் பாக்கெட்டை வாங்க வேண்டும், அதில் அதிக தண்ணீர் கலக்க முடியாது என்பதால் இரண்டு பாக்கெட் வாங்க நேரிடலாம். இல்லை என்றால் கூடுதல் தொகை கொடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்க வேண்டி இருக்கும்.

Also Read

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 4.50% கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் பச்சை பால் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஆவின் நிறுவனம், பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டவில்லை என தெரிவித்துள்ளது. பச்சை பாக்கெட் பால் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளது.

Recommended For You

இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான "Green Magic" பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் Green Magic பாலும் உட்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளது.

எனவே, பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. ஆவின் Green Magic பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என உறுதி தந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+