தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பயணித்து வரும் வேளையில், முக்கியமான திட்டத்தைச் சென்னை, கோயம்புத்தூர்-க்கு மட்டும் உருவாக்கி வருகிறது. இது மட்டும் சாத்தியமானால் தமிழ்நாடு சையின்ஸ் பிக்ஷன் படங்களில் வருவது போல் பியூச்சரிஸ்டிக் நகரமாக மாறும். அப்படி என்ன திட்டம் என்று தானே கேட்குறீங்க..?
சென்னையில் போக்குவரத்துத் துறையின் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

சென்னை ஒருமைப்பாட்டுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் (Chennai Unified Metropolitan Transport Authority - CUMTA) சிறப்பு அதிகாரி ஐ. ஜெயகுமார் தலைமையில், 22 உறுப்பினர்களைக் கொண்ட 'சென்னை மாநகர சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு' (Chennai City Logistics Coordination Committee) அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த 22 பேர் கொண்ட குழுவின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டின் இவ்விரு நகரத்திலும் பசுமை சரக்கு போக்குவரத்தை (Green Logistics) மேம்படுத்துவதே ஆகும். இதன் மூலம், சரக்குப் போக்குவரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
தமிழ்நாடு அரசு சென்னை மற்றும் கோவை ஆகிய இரு நகரங்களுக்கான தனித்தனி 'சிட்டி லாஜிஸ்டிக்ஸ்' திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதில் கோயம்புத்தூர்-க்கான திட்டத்தை TIDCO அமைப்பும், சென்னைக்கான திட்டத்தை CUMTA அமைப்பும் தயார் செய்து வருகிறது.

இந்தக் 22 பேர் கொண்ட குழுவில் சென்னை மாநகர ஆணையர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவின் முக்கிய பணியே சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சரக்கு போக்குவரத்தைச் சிக்கனமானதாக மாற்றுவது மட்டும் அல்லாமல் புதுமையாகப் போக்குவரத்து முறையை எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்குவது தான். இதனால் இக்குழு எதிர்கால தொழில்நுட்பங்களையும் கருத்தில் கொள்ளும்.

உதாரணமாக தற்போது இக்குழு சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரம் முழுவதும் சரக்குகளை விநியோகிப்பதற்காக "ஃப்ளைங் டாக்சிகள்" (Flying Taxis) போன்ற ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படும் பணியில் உள்ளது. இதேபோல் ட்ரோன்களுக்கான முழு உட்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலைகளை அமைப்பதற்குக் காலம் தேவைப்படும் என்பதால் இதர பிற தொழில்நுட்பத்தையும் இந்த சிறப்பு குழு ஆய்வு செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஐந்து ஆண்டுகளுக்கான ஒரு புதிய போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் சரக்கு போக்குவரத்தையும், பயணிகள் போக்குவரத்தையும் மேம்படுத்துவது தான். இந்த கொள்கை மூலம் அடுத்த 10-15 வருடத்தில் தொழிற்துறைக்கும் தேவையான உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்.
More From GoodReturns

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications