பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி ,சேலை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றோடு இலவசமாக வேட்டி சேலையும் வழங்கி வருகிறது.
இன்னும் பொங்கல் பண்டிகைக்கு 17 நாட்களே இருக்கின்றன. இந்த சூழலில் எப்போது பொங்கல் பரிசு தொகை விநியோகம் செய்யப்படும் இலவச வேட்டி, சேலை எப்போதும் முதல் வழங்கப்படும் என அரசின் அறிவிப்புக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றோடு ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் வழங்கியது . அத்துடன் இலவச வேட்டி ,சேலையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறக்கூடிய இலவச வேட்டி ,சேலை குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை விநியோகம் செய்யும் வகையில் அவற்றை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐனவரி 10ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 17 நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த வாரம் நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் கூறினார். எனவே ஜனவரி மாத தொடக்கத்திலேயே டோக்கன் வினியோகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications